இந்தியா

”ஜெய்ஷாவுக்காக இனி மைதானத்தை மாற்றாதீர்கள்” - BCCI-க்கு சுட்டிக்காட்டும் ஆதித்யா தாக்கரே!

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய இந்திய அணிக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

”ஜெய்ஷாவுக்காக இனி மைதானத்தை மாற்றாதீர்கள்” - BCCI-க்கு சுட்டிக்காட்டும் ஆதித்யா தாக்கரே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித்சர்மா தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியுடன் கோப்பையை வென்றது.

இதையடுத்து வெற்றி கோப்பையுடன் நாடு திருப்பிய இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து மும்பையில் 2 கிலோ மீட்டருக்கு வெற்றிகொண்டாட்ட அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இந்திய அணியின் வெற்றிகொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.வான்கடே மைதானத்தில் பி.சி.சி.ஐ சார்பில் பாராட்டு விழா நடந்தது.

இந்நிலையில், ஜெய்ஷாவுக்காக இனி மைதானத்தை மாற்றாதீர்கள் என பி.சி.சி.ஐ ஆதித்யா தாக்கரே தனது சமூகவலைதளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் ”உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஒருபோதும் மும்பையில் இருந்து மாற்றாதீர்கள். நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் BCCIக்கு சொல்லியிருக்கும் செய்தி" தெரிவிக்கப்பட்டது.

மும்பையில் 2023 ஆம் ஆண்டு நடக்க இருந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஜெய்ஷாவின் வற்புறுத்தலால் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதைத்தான் பி.சி.சி.ஐக்கு ஆதித்யா தாக்கரே சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories