இந்தியா

ஹத்ராஸ் சம்பவம் - போலே பாபாவை காப்பாற்ற துடிக்கும் பா.ஜ.க அரசு!

சாமியார் போலே பாபாவை தப்ப வைக்க உத்தர பிரதேச அரசு முயற்சி செய்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹத்ராஸ் சம்பவம் - போலே பாபாவை காப்பாற்ற துடிக்கும் பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இந்து மத சத்சங்கம் சார்பில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. போலே பாபா என்பவர் தலைமையில் மானவ் மங்கள் மிலான் சத்பவன சமாகன் குழு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்கள் ஒரே பகுதியிலிருந்து வெளியேற முயன்ற நிலையில், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் பல நூறுபேர் சிக்கிக்கொண்டனர். இந்த நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க அரசு பொறுப்பேற்கவில்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஹத்ரஸ் பகுதியில் நடந்த மத விழாவில், பாதுகாப்பு பணியில் யாரும் இல்லை, அவசர ஊர்திகள் இல்லை, மக்கள் நெருக்கடியை கையாள எந்த குழுவும் இல்லை, வெயிலை தணிக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. இது போன்ற பல அலட்சியங்கள் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல், தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படும் போலே பாபாவை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மட்டுமே போலிஸார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் போலே பாபா மீது எப்ஐஆர் பதிவு செய்யாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து உத்தர பிரதேச பா.ஜ.க அரசு போலே பாபாவை யோகி அரசு பாதுகாக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories