இந்தியா

மீனவர்கள் கைது - முதலமைச்சரின் 3 கடிதங்களுக்கு பின் ஒன்றிய அமைச்சர் பதில் கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.

மீனவர்கள் கைது - முதலமைச்சரின் 3 கடிதங்களுக்கு பின் ஒன்றிய அமைச்சர் பதில் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் இந்திய மீனவர்களை தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சனையில் தலையிட்டு மீனவர்களை காப்பாற்றாமல் ஒன்றிய அரசு வேடிக்கைப் பார்த்து வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க கோரி ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி வருகிறார்.

இந்த ஜூன் மாதத்தில் மட்டும் மூன்று கடிதங்களை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதங்களை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஜெய்சங்கர் பதில் கடிதம் அளித்துள்ளார்.

அதில், ”இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பான உங்கள் கடிதங்களைப் பார்த்தேன். ஜூன் 26 ஆம் தேதி நிலவரப்படி, 34 மீனவர்கள் இலங்கையின் நீதிமன்றக் காவலில் உள்ளனர். 6 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகம் மூலம் , மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிப்போம்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories