இந்தியா

‘ஜெய் இந்துராஷ்டிரா’ - திருந்தாத பாஜக... பதவியேற்பின்போது பாஜக எம்.பி. முழக்கத்தால் பரபர !

நாடளுமன்றத்தில் பதவியேற்பின்போது ‘ஜெய் இந்துராஷ்டிரா’ என்று பாஜக எம்.பி எழுப்பிய முழக்கத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘ஜெய் இந்துராஷ்டிரா’ - திருந்தாத பாஜக... பதவியேற்பின்போது பாஜக எம்.பி. முழக்கத்தால் பரபர !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சியில் இருந்த கடந்த 10 ஆண்டுகளும் மக்களுக்கு பெரிய தொல்லைகொடுத்து வந்தது. குறிப்பாக சிறுபான்மையின மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியது. மேலும் அவர்களை நாட்டை விட்டு அனுப்ப பல வழிகளில் தொல்லை கொடுத்து வந்தது. பாஜகவினரும் இஸ்லாமிய மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி வந்தது.

இப்படியான சூழலில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பு குரலை எழுப்ப தொடங்கினர். தேர்தல் பிரசாரத்தின்போதும் இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை விதைத்துதான் பேசி வந்தனர் மோடி உட்பட பாஜகவினர். இந்த நாட்டையே இந்து மக்கள் வாழும் நாடாக அறிவிக்க பாஜக மறைமுகமாக முனைப்பு காட்டி வருகிறது.

‘ஜெய் இந்துராஷ்டிரா’ - திருந்தாத பாஜக... பதவியேற்பின்போது பாஜக எம்.பி. முழக்கத்தால் பரபர !

இந்த சூழலில் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பதவி பிரமாணத்தின்போது, பாஜக எம்.பி ஒருவர் ‘ஜெய் இந்துராஷ்டிரா' என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.பியின் இந்த பதவி பிரமாணத்துக்கு எதிர்க்கட்சிகள் அவையிலேயே தங்கள் கண்டன குரல்களை எழுப்பினர். இதனை தற்காலிக சபாநாயகரும் கண்டுகொள்ளாமல் அடுத்த உறுப்பினரை பதவி பிரமாணம் செய்ய அழைத்தார். தற்போது பாஜக எம்.பிக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

உத்தர பிரதேசத்தின் பைரேலி தொகுதியில் போட்டியிட்டு பாஜக எம்.பி-யாக இருப்பவர்தான் சத்திரப்பால் சிங் கங்க்வார் (Chhatrapal Singh Gangwar). இவர் உ.பி-யின் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர் ஆவார். இந்த சூழலில் முதல்முறையாக எம்.பியாக பதவியேற்றுள்ள சத்திரப்பால் சிங், தனது பெயரை கூறி இன்று பதவி பிரமாணம் செய்துகொண்டார்.

‘ஜெய் இந்துராஷ்டிரா’ - திருந்தாத பாஜக... பதவியேற்பின்போது பாஜக எம்.பி. முழக்கத்தால் பரபர !

அப்போது அவர் தனது பேச்சின் இறுதியில் ‘ஜெய் இந்துராஷ்டிரா’ என்று கூறினார். இது தற்போது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. பாஜக மதச்சார்பற்று இருப்பதாக வெளியில் போலியாக கூறி வரும் நிலையில், மீண்டும் அது பொய் என்று பாஜக எம்.பியின் பேச்சால் அம்பலமாகியுள்ளது. ஒன்றியத்தில் இருக்கும் பாஜக தலைமையிலான NDA கூட்டணி அரசு, இவ்வாறு நடந்துகொள்வது கண்டனத்திற்குரியது என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒன்றியத்தில் பாஜக ஆட்சியில் இருந்த கடந்த 10 ஆண்டுகளும் மக்களுக்கு பெரிய தொல்லைகொடுத்து வந்தது. குறிப்பாக சிறுபான்மையின மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியது. மேலும் அவர்களை நாட்டை விட்டு அனுப்ப பல வழிகளில் தொல்லை கொடுத்து வந்தது. பாஜகவினரும் இஸ்லாமிய மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி வந்தது.

இப்படியான சூழலில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பு குரலை எழுப்ப தொடங்கினர். தேர்தல் பிரசாரத்தின்போதும் இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை விதைத்துதான் பேசி வந்தனர் மோடி உட்பட பாஜகவினர். இந்த நாட்டையே இந்து மக்கள் வாழும் நாடாக அறிவிக்க பாஜக மறைமுகமாக முனைப்பு காட்டி வருகிறது.

banner

Related Stories

Related Stories