அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பணம் செலுத்திய பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களை அனுப்பும் நிகழ்ந்து அண்மைக் காலங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அமேசானில் ஆர்டர் செய்தவருக்கு உயிருடன் பாம்பு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த தம்பதியினர் அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர்.
இதையடுத்து அவர்களது ஆர்டர் டெலிவரியாகியுள்ளது. பிறகு டெலிவரி பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் இதை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வீட்டிற்கு வந்த வனத்துறையினர் பாம்மை பிடித்துச் சென்றனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து தனது வாடிக்கையாளரிடம் அமேசான் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.