இந்தியா

”பள்ளிக்கு சென்றிருந்தால் மகாத்மா காந்தியை பற்றி தெரிந்திருக்கும்” : மோடியை விமர்சித்த பிரகாஷ் ராஜ்!

”வாட்ஸ்அப் பல்கலைகழகத்தை தாண்டி கொஞ்சம் வளருங்கள்” என காந்தி குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

”பள்ளிக்கு சென்றிருந்தால் மகாத்மா காந்தியை பற்றி தெரிந்திருக்கும்” : மோடியை விமர்சித்த பிரகாஷ் ராஜ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெறும் மக்களவை தேர்தலில் 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7 ஆம் கட்ட தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி 57 தொகுதிகளில் நடைபெறுகிறது.

இந்த தொகுதிகளுக்கான இறுதிகட்ட பிரச்சாரம் இன்று மாலை நிறைவடைகிறது. இதனால் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.க அரசை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தேர்தலில் களம் கண்டுள்ளன. இதனால் இந்த தேர்தல் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

'இந்தியா' கூட்டணி உருவானதில் இருந்தே பா.ஜ.க தலைமை பீதியடைந்தது. அதன் வெளிப்பாடாகத்தான் பிரதமர் மோடி இந்து - முஸ்லீம் பிரிவிணையை தூண்டும் விதமாக பிரச்சாரங்களில் பேசியுள்ளார்.

மேலும் நேர்காணல்களின் போதும், கடவுளால் அனுப்பப்பட்ட அவதாரம் நான் என்றும் மோடி கூறியுள்ளார். தற்போது காந்தி திரைப்படம் வெளியான பிறகுதான் மகாத்மாவை எல்லோருக்கும் தெரியும் என்று ’நா கூசாமல்’ பொய் பேசியுள்ளார்.

தனியார் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த பிரதமர் மோடி, ”1982ஆம் ஆண்டு ‘காந்தி’ திரைப்படம் வெளியாவதற்கு முன், யாருக்கும் மகாத்மா காந்தியை தெரியாது” என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் கருத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டங்கனை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ், வாட்ஸ்அப் பல்கலைகழகத்தை தாண்டி கொஞ்சம் வளருங்கள் என விமர்சித்துள்ளார்.

இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், ”மிஸ்டர் மோடிஜி நீங்கள் பள்ளிக்கு சென்றிருந்தால் எங்கள் மகாத்மாவை யாரென்று அறிந்திருப்பீர்கள். தயவு செய்து உங்கள் வாட்ஸ்அப் பல்கலைகழகத்தை தாண்டி கொஞ்சம் வளருங்கள்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories