இந்தியா

"மோடியை விஷ்ணுவின் 11வது அவதாரமாக காட்ட பாஜக முயற்சி" : மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு!

மோடியை விஷ்ணுவின் அவதாரமாக காட்ட பா.ஜ.க தலைவர்கள் முயற்சி செய்வதாக மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

"மோடியை விஷ்ணுவின் 11வது அவதாரமாக காட்ட பாஜக முயற்சி" : மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒடிசா மாநிலம் பாலசூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஸ்ரீகாந்த் கே ஜெனாவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய மல்லிகார்ஜூன கார்கே,"இந்த தேர்தல் வருங்கால சந்ததியினருக்கானது. மக்கள் கவனமாக வாக்களிக்க வேண்டும். அரசியலமைப்பும், ஜனநாயகமும் ஆபத்தில் உள்ளது. அரசியலமைப்பை பாதுகாக்க தவறினால் எதிர்காலம் ஆபத்தில் சிக்கி விடும்.

பிரதமர் மோடியை விஷ்ணுவின் 11 ஆவது அவதாரமாக மாற்ற பா.ஜ.க தலைவர்கள் முயற்சிக்கிறார்கள். இதை இந்திய மக்கள் ஏற்க மாட்டார்கள். ஜூன் 4 ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன் ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் மாதம் ரூ.8,500 வழங்கப்படும். மேலும், குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.250ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்படும். ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories