இந்தியா

”இந்தியா கூட்டணி கோடிக்கணக்கான கோடீஸ்வரர்களை உருவாக்கும்” : ராகுல் காந்தி சொல்வது என்ன?

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

”இந்தியா கூட்டணி கோடிக்கணக்கான கோடீஸ்வரர்களை உருவாக்கும்” : ராகுல் காந்தி சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காங்கிரஸ் வேட்பாளர் அமரீந்தர் சிங் ராஜாவை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகி ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி MP, "பா.ஜ.கவால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் அரசியல் சாசனத்தை காப்பற்றவும், பாதுகாப்பதற்றகாகவுமே இந்த தேர்தல். 70 ஆண்டுகளில் முதல்முறையாக தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என வெளிப்படையாக பா.ஜ.க தலைவர்கள் கூறி இருக்கிறார்கள்.

அம்பேத்கர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களால் அரசியல் சாசனம் வழங்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு உள்ளிட்ட மக்களின் உரிமைகளை அரசியல் சாசனம்தான் உறுதி செய்கிறது.

மதம், சாதியை கொண்டு மக்களை பிளவுபடுத்த பார்கிறார் மோடி. 25 பேருக்காக மட்டுமே மோடி ஆட்சி செய்து வந்துள்ளார். அவர்களுக்கு துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது உடமை சொத்துக்களை சில பணக்காரர்களுக்கு விற்றுள்ளார்.

மோடி 22 பணக்காரர்களை உருவாக்கினார். ஆனால் காங்கிரஸ் கட்சி கோடிக்கணக்கான கோடீஸ்வரர்களை உருவாக்கும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த உடன் ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கு மாதம் ரூ.8500 வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories