பீகாரில் பாடலிபுத்ரா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்த பேராசரியை ஒருவர் மாணவர்கள் விடைத்தாள் திருத்துவதை வீடியோவாக எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Reels வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வீடியோவை பார்த்த பலரும், "இவர் விடைத்தாள் திருத்தும் மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள்"என கிண்டலடித்து பதிவு செய்து வருகிறார்கள்.
மற்றொருபுறம், "இதுதான் மாணவர்களின் விடைத்தாளை திருத்தும் லட்சனமா?. இது கல்வித்துறையையே அவமதிக்கும் செயலாகும்" என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட பேராசிரியை மீது பல்கலைக்கழக நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.