இந்தியா

சூரிய காந்தப் புயல்களின் தரவுகளை சேகரித்த ஆதித்யா விண்கலம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியது என்ன ?

சூரியனில் இருந்து வெளிப்பட்ட காந்தப் புயல்களின் முக்கியமான தரவுகளை ஆதித்யா விண்கலம் சேகரித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரிய காந்தப் புயல்களின் தரவுகளை சேகரித்த ஆதித்யா விண்கலம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நிலவை நோக்கி சந்திராயன் விண்கலத்தை அனுப்பிய இஸ்ரோ அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்ய குறிவைத்து ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. அந்த விண்கலம் கடந்த ஜனவரி 1-ம் தேதி எல்-1 எனும் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது.

இதன்மூலம் சூரியனை ஆராயும் இந்தியாவின் முதல் விண்வெளி திட்டம் என்ற சாதனையை ஆதித்யா விண்கலம் பெற்றது. இந்த திட்டத்தின் முதல் வெற்றியாக சூரிய காற்றின் எலக்ட்ரான்கள் நிலையை ஆதித்யா விண்கலம் முழுமையாக கண்டறிந்தது.

இந்த நிலையில், சூரியனில் இருந்து வெளிப்பட்ட காந்தப் புயல்களின் முக்கியமான தரவுகளை ஆதித்யா விண்கலம் சேகரித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய இஸ்ரோ விஞ்ஞானிகள், "கடந்த 11 ஆம் தேதி சூரியனின் ஏ.ஆர் 3664 என்ற குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து வெளிப்பட்ட சூரிய காந்தப் புயல் பூமியில் மிக ப்பெரிய அளவில் தாக்கியது. இது குறித்தான எச்சரிக்கையை நாசா மற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் எச்சரித்து இருந்தனர்.

சூரிய காந்தப் புயல்களின் தரவுகளை சேகரித்த ஆதித்யா விண்கலம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியது என்ன ?

ஆதித்யா எல் 1 விண்கலம்,சூரியனில் இருந்து வெளிப்பட்ட காந்தப் புயல்களின் முக்கியமான தரவுகளை சேகரித்துள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள அஸ்பெக்ஸ் என்ற அறிவியல் ஆய்வு கருவியில் இருந்து எடுக்கப்பட்டுள்ள தரவுகள் மூலமாக பூமிக்கு சூரியனில் இருந்து அதிகளவில் காந்த புயல் வீசப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் பூமியின் துருவப் பகுதி அதிகளவில் பாதிப்புக்குள்ளானதாக ஆதித்யா எல் 1 அனுப்பிய தரவுகள் தெரிவிக்கின்றன.

2003ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் இது. தற்போது ஏற்பட்ட சூரிய காந்தப் புயல் பூமியின் உயர் அட்ச ரேகையில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த சூரிய காந்தப் புயலால் இந்திய பகுதி குறைந்த அளவே பாதிக்கப்பட்டது. பசிபிக் மற்றும் அமெரிக்க பகுதியில் சூரிய காந்தப் புயல் கடும் விளைவுகளை ஏற்படுத்தியது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories