இந்தியா

தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை நிறுத்தப்பட்டதா? - பதாஞ்சலி நிறுவனத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி !

தடை செய்யப்பட்ட 14 மருந்துகளின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதா? என்பது குறித்து பதிலளிக்க உச்சநீதிமன்றம் பாபா ராம்தேவுக்கு உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை நிறுத்தப்பட்டதா? - பதாஞ்சலி நிறுவனத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆதரவாளரான யோகா சாமியார் ராம்தேவ், பதாஞ்சலி எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தை பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் அதிகளவில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். கொரோனா அலையின் போது உலகமே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இயங்கி வந்த வேளையில், கொரோனா வைரஸை எதிர்க்கும் எனக் கூறி CORONIL என்ற ஒரு மருந்தை அறிமுகம் செய்தார் ராம்தேவ். பின்னர் அவை கொரோனாவை எதிர்க்காது என மருத்துவ துறை அறிஞர்கள் அறிவித்தனர்.

அதோடு மட்டுமின்றி அலோபதி மருத்துவத்துக்கு எதிரான பல்வேறு பொய்யான விளம்பரங்களையும் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டு பரப்பி வந்தது. அதில் பல தவறான கருத்துக்களும், அலோபதி மருத்துவத்துக்கு எதிரான கருத்துக்களும் இருந்தது. இதனால் பொதுமக்களிடையே தவறான கருத்துகள் பரவியது.

இதனைத் தொடர்ந்து அலோபதி மருத்துவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இதுபோன்ற விளம்பரங்கள் இனி ஒளிபரப்பக்கூடாது என பதாஞ்சலி நிறுவனத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், 14 மருந்துகளின் விற்பனையை நிறுத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை நிறுத்தப்பட்டதா? - பதாஞ்சலி நிறுவனத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி !

ஆனால் தொடர்ந்து அதுபோன்ற விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதால் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் இனி, இதுபோன்ற விளம்பரங்கள் இனி ஒளிபரப்பப்படாது அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் பதாஞ்சலி நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்த நிலையில், தடை செய்யப்பட்ட 14 மருந்துகளின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதா? கையிருப்பு அகற்றப்பட்டு விட்டதா? என்பது குறித்து பதிலளிக்க உச்சநீதிமன்றம் பாபா ராம்தேவுக்கு உத்தரவிட்டுள்ளது. இன்று நடைபெற்ற விசாரணையில், தடை செய்யப்பட்ட 14 மருந்துகளின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதா? கையிருப்பு அகற்றப்பட்டு விட்டதா? என்பது குறித்தும் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மூன்று வாரத்தில் அது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவித்தனர்.

பின்னர், போலி விளம்பரங்கள் மீதும், அதன் மீதான புகார்கள் மீதும் மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இறுதி வாய்ப்பு வழங்கி உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏன் இதுவரை பதிலளிக்க வில்லை என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

banner

Related Stories

Related Stories