இந்தியா

லடாக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு : யூனியன் பிரதேசங்களை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!

அண்டை நாட்டை அடக்க முன்வராத ஒன்றிய பா.ஜ.க, உள்நாட்டில் ஊரடங்குகளை அமல்படுத்தி வருகிறது.

லடாக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு : யூனியன் பிரதேசங்களை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் மக்களை தொடர்ந்து, ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யூனியன் பிரதேசங்களின் மக்களையும் வஞ்சித்து வருகிறது பா.ஜ.க.

டெல்லியாக இருந்தாலும் சரி, ஜம்மு - காஷ்மீராக இருந்தாலும் சரி, அல்லது லடாக் ஆக இருந்தாலும் நிலை என்னவோ ஒன்று தான்.

டெல்லியில், ஆம் ஆத்மி கட்சி அதிபெரும்பான்மை கொண்டு ஆட்சி புரிந்து வந்தாலும், அமைச்சர்களின் மகிழுந்துகளை இடைமறித்து சோதனை நடத்தவும், முதல்வரை கைது செய்யவும் அதிகாரம் படைத்துள்ள நிலையில், ஒன்றிய பா.ஜ.க இருக்கிறது.

அதன் படியே, டெல்லி முதல்வர் கைது, டெல்லி MPக்கள் கைது ஆகியவை வலுக்கத்தொடங்கியுள்ளன. டெல்லி அமைச்சர்களும் கைது செய்யப்படுவர் என மறைமுகமாக பா.ஜ.க.வால் மிரட்டப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநில தகுதி, பா.ஜ.க.வின் திட்டமிட்ட சதியால் தகர்க்கப்பட்டு, 2019ஆம் ஆண்டு முதல் ஜம்மு - காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் அடையாளப்பட்டு வருகிறது.

இதனை எதிர்த்து ஜம்மு - காஷ்மீர் மக்களும், லடாக் மக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும், அண்மையில் லடாக் போராட்டம் உச்சத்தை தொட்டுள்ளது.

சீனர்களின் ஆக்கிரமிப்பு, லடாக்கிற்கு என்று தனி மாநில உரிமை என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பல்லாயிர கணக்கான மக்கள் கடும் குளிரில் போராடி வருகின்றனர்.

லடாக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு : யூனியன் பிரதேசங்களை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!

மேலும், லடாக் மக்கள் தொகையில் 46% இஸ்லாமியர்களும், 40% புத்த சமயத்தினரும் இருப்பதால், பா.ஜ.க மேற்கொள்ளும் எந்த திணிப்பு நடவடிக்கையும் செல்லுபடியாகாமல் இருக்கிறது.

அதன் காரணமாக, லடாக் யூனியன் பிரதேசத்திற்கென தனி சட்டமன்றமோ, முதல்வரோ இல்லாத சூழலை உருவாக்கி, தன் அதிகாரத்திற்குள் வைத்துள்ள பா.ஜ.க, அதிகார ஒடுக்குமுறையை முன்னெடுத்துள்ளது.

இதன் வழி, லடாக் மக்களின் உரிமை மீட்பு கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க விரும்பாத மோடி அரசு, லடாக்கில் 144 தடை உத்தரவு பிறப்பித்து, ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

கூடுதலாக, இணைய சேவையின் வேகத்தையும் 2G அளவில் குறைத்து, பா.ஜ.க ஆளும் மற்ற மாநில மக்களின் கருத்துரிமை பறிப்பு நடவடிக்கையை, ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பகுதியான லடாக்கிலும் செயல்படுத்தி வருகிறது.

இது குறித்து லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், “லடாக் போர்களமாக மாறியுள்ளது. இளம் தலைவர்களையும், சராசரி லடாக் மக்களையும், தேச விரோதிகள் என கைது செய்ய துடிக்கின்றனர் பா.ஜ.க.வினர்” என தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில், அனைத்திலும் பார்த்து பார்த்து செய்யும் பா.ஜ.க, தனது அடக்குமுறையை மட்டும் என்றும் மாற்றாத சூழல் சர்ச்சையாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories