இந்தியா

‘ஐரிஸ்’ : AI செயற்கை நுண்ணறிவு ஆசிரியரை அறிமுகப்படுத்திய கேரள பள்ளி : வீடியோ காட்சிகள் வைரல் !

கேரளாவில் செயல்படும் பள்ளி ஒன்று செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ ஆசிரியரை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘ஐரிஸ்’ : AI செயற்கை நுண்ணறிவு ஆசிரியரை அறிமுகப்படுத்திய கேரள பள்ளி : வீடியோ காட்சிகள் வைரல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமீபத்திய ஆண்டுகளில் பல மடங்கு முன்னேறியுள்ளது, தற்போதைய நிலையில், செயற்கை நுண்ணறிவு செயலிகள் பல மடங்கு பெருகியுள்ளன. அதிலும் சமீபத்தில் அறிமுகமான Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும்.

இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் தரமுடியும். அதிலும் கல்வி நிலைய பயன்பாடுகளில் கடிதம் முதல் கட்டுரை வரை அனைத்தையும் இதனால் செய்யமுடியும்.

அதேநேரம் கூகிள் போன்ற பல்வேறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர ஏராளமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு புதிய விஷயங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்டமாக அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒடிசா மாநில ‘OTV’ எனும் தனியார் செய்தித் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, அதன்மூலம் செய்தியும் வாசிக்கச் செய்து சாதனை படைத்தது. அந்த செய்தி வாசிப்பாளருக்கு 'லிசா' என்ற பெண் வைக்கப்பட்டுஒடியா மற்றும் ஆங்கில மொழியில் செய்தி வாசிக்கும் வகையில் அதனை ப்ரோக்ராம் செய்தது.

இந்த நிலையில், கேரளாவில் செயல்படும் பள்ளி ஒன்று செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ ஆசிரியரை அறிமுகப்படுத்தியுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி மேல்நிலைப்பள்ளி மேக்கர்லேப்ஸ் எஜுடெக் எனும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந் இந்த ரோபோ ஆசிரியரை உருவாகியுள்ளது.

‘ஐரிஸ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் பல்வேறு பாடங்களிலிருந்து கேள்விகள் எழுப்பினாலும் சரளமாக பேசியபடி பதில் அளிக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் அடிபகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் இதனால் தானாக இடத்தையும் மாற்றிக்கொள்ள முடியும். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பாராட்டை பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories