இந்தியா

ராம் லீலா கொண்டாட்டம்... அனுமன் வேடம் அணிந்து நடித்த நபர்... சட்டென்று சரிந்து விழுந்ததில் நேர்ந்த சோகம்!

நேற்று ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஹரியானாவில் நடைபெற்ற இராம் லீலா நாடகத்தில், அனுமன் வேடம் அணிந்து நடித்துக்கொண்டிருந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராம் லீலா கொண்டாட்டம்... அனுமன் வேடம் அணிந்து நடித்த நபர்... சட்டென்று சரிந்து விழுந்ததில் நேர்ந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில், இராமர் இருப்பதாக கூறி இந்துத்வ கும்பல் அதனை இடித்த நிலையில், தற்போது அங்கே இராமர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரது எதிர்ப்புகளையும் மீறி ஒன்றிய பாஜக இராமர் கோயிலை நேற்று அரசியல் நோக்கத்திற்காக திறந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தற்போது இந்த கோயில் திறக்கப்பட்டுள்ளது முழுமையாக அரசியல் நோக்கத்திற்காகவே என்று கூறி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளது. மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நேற்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பேரணி ஒன்றையும் நடத்தினார்.

ராம் லீலா கொண்டாட்டம்... அனுமன் வேடம் அணிந்து நடித்த நபர்... சட்டென்று சரிந்து விழுந்ததில் நேர்ந்த சோகம்!

ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தாலும், மற்றொரு தரப்பு இந்த இராமர் கோயில் திறப்பு விழாவை நேற்று உற்சாகமாக கொண்டாடியது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் என நடத்தப்பட்டது. அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள பல்வேறு கோயில்களிலும் விழா கொண்டாடப்பட்டது.

ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள பிவானி என்ற பகுதியில் இருக்கும் சிறிய கோயில் ஒன்றில் 'ராம் லீலா' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண அங்கிருக்கும் மக்கள் கூடிய நிலையில், நாடகமும் தொடர்ந்து அரங்கேறியது. அப்போது அனுமன் வேடத்தில் ஹரிஷ் மேத்தா என்பவர் நடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சட்டென்று மயங்கி விழுந்துள்ளார்.

ராம் லீலா கொண்டாட்டம்... அனுமன் வேடம் அணிந்து நடித்த நபர்... சட்டென்று சரிந்து விழுந்ததில் நேர்ந்த சோகம்!

அப்போது அங்கிருந்தவர்கள் இவர் மயங்கி விழுந்ததை நாடகத்தின் ஒரு பகுதி என்று கருதி அவரை எழுப்ப முயலாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்படி இருந்தும் அவர் நீண்ட நேரம் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அவரை மீட்ட அங்கிருந்தவர்கள் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றும், அவர் எழுந்திருக்கவில்லை.

இதையடுத்தே அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இது குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இராமர் கோயில் திறப்பு நாளில், ராம் லீலா நாடகத்தில் நடந்த இந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories