இந்தியா

போலி குஜராத் மாடல் : 10 மோசடிகளை குறிப்பிட்டு பா.ஜ.க முகத்திரையை கிழித்த மல்லிகார்ஜூன கார்கே!

ஒன்றிய அரசின் பெயர்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த 10 பேரின் பட்டியலை வெளியிட்டு காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

போலி குஜராத் மாடல் : 10 மோசடிகளை குறிப்பிட்டு பா.ஜ.க முகத்திரையை கிழித்த மல்லிகார்ஜூன கார்கே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் சென்றுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒன்றிய அரசுகளின் பெயரை பயன்படுத்தி மோடி செய்து வளர்ச்சியடைந்த குஜராத்தை சேர்ந்த 10 பேரின் பெயர்களை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவை பார்ப்போம்:-

1. PMO இன் போலி அதிகாரி

குஜராத்தை சேர்ந்த கிரண் பாய் படேல் என்பவர் தன்னை PMO அதிகாரி எனக் கூறிக் கொண்டு ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் ராணுவ பாதுகாப்புடன், பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத ரகசிய இடங்களுக்கு சென்று மோசடி செய்துள்ளார். கிட்டத்தட்ட 5 மாதங்கள் அவரை PMO அதிகாரி என கூறி மோசடி செய்துள்ளார்.

2. போலி CMO அதிகாரி

குஜராத்தை சேர்ந்த விராஜ் படேல் என்பவர் முதல்வர் அதிகாரி எனக்கூறிக் கொண்டு மோசடி செய்துள்ளார். மேலும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மருமகன் எனக் கூறியும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

3.போலி டோல் பிளாசாக்கள்

மோர்பி மாவட்டத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக போலி சுங்கச்சாவடி இயங்கி வந்துள்ளது. இந்த ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

4. போலி நீர்ப்பாசனத் துறை அலுவலகங்கள்

குஜராத்தின் தாஹோத் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நீர்ப்பாசனத் துறையுடன் தொடர்புடைய 6 போலி அரசு அலுவலகங்கள் இயங்கி வந்துள்ளனர். இவர்கள் ரூ.18.59 கோடி மோசடி செய்துள்ளனர்.

5. போலி அரசு அலுவலகங்கள்

குஜராத் மாநிலம் சோட்டா உடேபூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் மாவட்டத்தின் போடேலி தாலுகாவில் போலி அரசு அலுவலகம் அமைத்து மோசடி செய்பவர், அரசு அதிகாரி போல் போலி கையெழுத்து, அரசு முத்திரைகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை தயாரித்து ரூ.4 கோடிக்கு மோசடி செய்துள்ளார்.

6. போலி இருமல் சிரப்

குஜராத்தின் கேடா மாவட்டத்தில் போலி இருமல் சிரப் குடித்து 5 பேர் உயிரிழந்தனர். அகமதாபாத்தில் தயாரிக்கப்பட்ட சிரப் இடைத்தரகர்கள் மூலம் கிராமங்களுக்கு விற்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அதே மாவட்டத்தில் உள்ள பாஜகவின் நாடியாட் தாலுகா பிரிவின் பொருளாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

7. போலி விசா மோசடி

காந்திநகர், அகமதாபாத் மற்றும் வதோதராவில் அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் 17 போலி நிறுவணங்கள் போலி விசா மற்றும் பாஸ்போர்ட் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

8. போலி கால்பந்து பந்தய ஆப் ஸ்கேம்

குஜராத்தில் ஒரு சீன நாட்டவரும் அவரது கூட்டாளிகளும் போலி கால்பந்து சூதாட்ட செயலியை உருவாக்கி 1,200 பேரிடம் கோடிகளை ஏமாற்றியுள்ளனர்.

9. சந்திரயான்-3க்கு தவறான கடன் வாங்கிய போலி விஞ்ஞானி

பா.ஜ.க ஆட்சியில் FAKERY EPIDEMIC எவ்வளவு பரவியுள்ளது என்றால், குஜராத்தைச் சேர்ந்த மிதுல் திரிவேதி என்ற மோசடி நபர் சந்திரயான்-3 என்ற தேசிய சாதனைக்கு பெருமை சேர்க்க முன்வந்துள்ளார். இவர் போலி அடையாளத்தை உருவாக்க இஸ்ரோவின் போலி நியமனக் கடிதத்தை உருவாக்கி மோசடி செய்துள்ளார்.

10. ரூ. 2000 நோட்டில் 98% போலி நோட்டுகள்:

குஜராத்தில் அதிகபட்சமாக ரூ.2000 மதிப்புள்ள 11.28 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன, இது மொத்த தேசிய பறிமுதல் செய்யப்பட்ட அதே மதிப்பின் 11.48 லட்சம் நோட்டுகளில் 98% ஆகும்.

banner

Related Stories

Related Stories