இந்தியா

ஆசை ஆசையாக iphone ஆர்டர் செய்த இளைஞர் : பார்சலை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி!

மஹாராஷ்டிராவில் iphone ஆர்டர் செய்த இளைஞருக்கு சோப்பு கட்டிகள் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசை ஆசையாக iphone ஆர்டர் செய்த இளைஞர் : பார்சலை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பணம் செலுத்திய பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களை அனுப்பும் நிகழ்ந்து அண்மைக் காலங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் iphone ஆர்டர் செய்தவருக்குச் சோப்பு கட்டிகள் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரூ.46 ஆயிரம் மதிப்புள்ள iphone-ஐ ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து நவம்பர் 9ம் தேதி அவருக்கு பார்சல் டெலிவரியாகியுள்ளது.

ஆசை ஆசையாக iphone ஆர்டர் செய்த இளைஞர் : பார்சலை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி!

பின்னர் ஆசை ஆசையாக அந்த பார்சலை திறந்து பார்த்தபோது அதில் ஆர்டர் செய்த செல்போனுக்கு பதில், மூன்று சோப்பு கட்டிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனத்திற்குத் தொடர்பு கொண்டு முறையிட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் சரியாகப் பதில் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் இந்த இளைஞர் இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இ-காமர்ஸ் தளங்களில் இப்படி குளறுபடிகள் நடப்பது தொடர்கதையாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories