இந்தியா

வீணான விளக்குகளில் இருந்த எண்ணெய்களை எடுத்துச்சென்ற குழந்தைகள் : கின்னஸ் சாதனை செய்த உ.பி-யின் அவலநிலை !

வீணான விளக்குகளில் இருந்த எண்ணெய்களை எடுத்துச்சென்ற குழந்தைகள் : கின்னஸ் சாதனை செய்த உ.பி-யின் அவலநிலை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர். அதிகாலை முதலே ஆங்காங்கே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான மக்கள் கோயில்களை தீபங்கள் ஏற்றி வழிபடுகின்றனர்.

அந்த வகையில் தற்போது உ.பியில் உள்ள கோயில் ஒன்றில் 22 லட்சத்துக்கும் அதிகமான தீபங்கள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இதில் மீதமிருக்கும் எண்ணெய்களை குழந்தைகள் தங்கள் வீடுகளுக்கு எடுத்து செல்லும் சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீணான விளக்குகளில் இருந்த எண்ணெய்களை எடுத்துச்சென்ற குழந்தைகள் : கின்னஸ் சாதனை செய்த உ.பி-யின் அவலநிலை !

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அம்மாநில சராயு நதிக்கரையில் நேற்று இரவு தீப உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் சுமார் 22 லட்சத்து 23 ஆயிரம் தீபங்கள் சராயு நதிக்கரையை சுற்றி ஏற்றப்பட்டது.

இந்த தீப உற்சவ விழா நிகழ்வானது கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதோடு இந்த கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்கப்பட்டது. இந்த சூழலில் அங்கிருக்கும் ஏழை சிறுவர்கள் விளக்குகளில் மீதமிருக்கும் எண்ணெய்களை தங்கள் வீடுகளுக்கு எடுத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

வீணான விளக்குகளில் இருந்த எண்ணெய்களை எடுத்துச்சென்ற குழந்தைகள் : கின்னஸ் சாதனை செய்த உ.பி-யின் அவலநிலை !

ஒரு பக்கம் கின்னஸ் சாதனை படைக்க, அத்தனை லிட்டர் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றப்படுகிறது, மறுபுறம் அந்த விளக்குகளில் மீதமிருக்கும் எண்ணெய்களை அதுவும் சிறுவர்கள் எடுத்து செல்வது, இன்னும் அங்கிருக்கும் மக்கள் வாழ்வில் ஒளி வராமல் இருப்பதையே சுட்டி காட்டுவதாக இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த எண்ணெய்களை அந்த சிறுவர்கள் தங்கள் வீடுகளில் சமையலுக்கு உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து நிலவி வருகிறது. இப்படி நாடு வளர்ச்சி பாதையில் செல்வதாக கூறி வரும் இவர், மக்கள் முன்னேற்றத்திற்கு என்று எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories