இந்தியா

இன்சூரன்ஸ் பணத்துக்காக ஆள் மாறாட்டம் : பிச்சை எடுப்பவரை கொலை செய்து பணத்தை வாங்கி சொகுசு வாழ்க்கை !

இன்சூரன்ஸ் பணத்துக்காக பிச்சை எடுப்பவரை கொலை செய்து, அதன் மூலம் இன்சூரன்ஸ் பணத்தை பெற்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்சூரன்ஸ் பணத்துக்காக ஆள் மாறாட்டம் : பிச்சை எடுப்பவரை கொலை செய்து பணத்தை வாங்கி சொகுசு வாழ்க்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரப்பிரதேச மாநிலம், கௌதம் புத்தா நகர் மாவட்டத்தைச் சேர்ந்த அனில் சிங் என்பவர் தனது பெயரில் இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றை எடுத்துள்ளார். சிறிது நாட்களுக்கு பின்னர், ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த நபர் விபத்தில் இறந்தால், காப்பீடு செய்த தொகையைவிட நான்கு மடங்கு பணம் கிடைக்கும் என்று அவருக்கு தெரியவந்துள்ளது.

உடனடியாக அந்த பணத்தை பெற்றுக்கொள்வது குறித்து தனது தந்தை, சகோதரர் அபய் ஆகியோருடன் சேர்ந்த திட்டமிட்டுள்ளார். அப்போது தனக்கு பதில், வேறொருவரை இறந்ததாக கூறி அந்தப் பெற்றுக்கொள்ள அனைவரும் சேர்ந்து முடிவெடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தெருவில் பிட்சை எடுத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்துள்ளனர். பின்னர் அவர் மயங்கியதும் அவரை காரின் ஓட்டுநர் இருக்கையில் அமரவைத்து பின்னர் காரை கம்பம் ஒன்றில் மீது மோதவைத்துள்ளனர்.

இன்சூரன்ஸ் பணத்துக்காக ஆள் மாறாட்டம் : பிச்சை எடுப்பவரை கொலை செய்து பணத்தை வாங்கி சொகுசு வாழ்க்கை !

அங்கு கார் மோதியதில் தீப்பிடித்த நிலையில், பிட்சை எடுப்பவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் சாலை விபத்தில், அனில் சிங் இறந்ததாக கூறி, இன்சூரன்ஸ் பணத்தை எடுத்துள்ளனர். பின்னர் அனில் சிங் ராஜ்குமார் என்ற பெயரில் அகமதாபாத்துக்கு வந்து வாழ ஆரம்பித்தார்.

இந்த சம்பவம் 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளி வந்துள்ளது. இது குறித்து சிலர் போலிஸாருக்கு தகவல் அளித்த நிலையில், தற்போது அனில் சிங்கை போலிஸார் கைது செய்துள்ளனர். போலிஸார் விசாரணையில், ராஜ்குமார் என்ற பெயரில் அவர் ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை வாங்கியதும் தெரியவந்தது.

banner

Related Stories

Related Stories