உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர்களது ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே இங்கு நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் வெளிப்படுத்துகிறது.
தினமும் மாநிலத்தின் ஏதாவது ஒரு மூளையில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என புள்ளி விவரங்கள் கூறுகிறது. செப் 27ம் தேதி 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று இளம் பெண்ணை கடத்தி சென்று ஒரு வீட்டில் வைத்து 20 நாட்களுக்கு மேல் கூட்ட பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளது.
பிறகு அப்பெண் இப்பகுதியிலிருந்த பெண்கள் உதவியுடன் தப்பித்து வீட்டிற்கு வந்து நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலிஸார் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதால் அவர்களைக் கைது செய்யப்படவில்லை என வட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த கொடூரம் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே நேற்று முன்தினம் டெங்கு நோயாள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண் ஒருவரை மருத்துவமனை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதேபோல் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை டெலிவரி ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இப்படி தினம் தினம் பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதைத் தடுக்க முடியாமல் யோகி அரசு வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.