இந்தியா

கங்கை நீருக்கு 18% GST வரி - பாஜக அரசின் பாசாங்குத்தனத்தின் உச்சம் : காங்கிரஸ் கண்டனம்!

கங்கை நீருக்கு 18% GST வரி விதித்த பா.ஜ.க அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கங்கை நீருக்கு 18% GST வரி -  பாஜக அரசின் பாசாங்குத்தனத்தின் உச்சம் : காங்கிரஸ் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக இன்று உத்தராகண்ட் மாநிலம் சென்றுள்ளார். அங்குப் புனிதமான ஜோலிங்காங் மலையின் முன்பாக பாரம்பரிய வெள்ளை நிற உடைகளை அணிந்து கொண்டு தியானம் செய்தார்.

மேலும் குஞ்ஜி கிராமத்திற்குச் சென்று பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அதோடு ரூ.4,200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் பிரதமர் மோடி உத்தராகண்டில் இருக்கும் நிலையில் கங்கை நீருக்கு 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

கங்கை நீருக்கு 18% GST வரி -  பாஜக அரசின் பாசாங்குத்தனத்தின் உச்சம் : காங்கிரஸ் கண்டனம்!

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள x சமூகவலைதளப் பதிவில், இன்று நீங்கள் உத்தராகண்டில் இருப்பது நல்லது. உங்கள் அரசு கங்கை நீருக்கு 18% ஜி.எஸ்.டி வரியை விதித்துள்ளது. இது வீட்டிலிருந்து கங்கை நீரை வாங்குபவர்களுக்கு என்ன சுமையாக இருக்கும் என்று என்னால் யோசிக்க முடியவில்லை.

சாமானிய மக்களைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காத பா.ஜ.க அரசின் பாசாங்குத்தனத்தின் உச்சம் இது." என விமர்சித்துள்ளார். மேலும் கங்கை நீருக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளதற்கு அரசியல் கட்சிகள் பலவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories