இந்தியா

புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு மின் கட்டணம் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

புதுச்சேரியில் திடீரென மின்கட்டணம் உயத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு மின் கட்டணம் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி ஆண்டுதோறும் உத்தேச மின்கட்டணம் அறிவிக்கப்படும். தொடர்ந்து ஒழுங்கு முறை ஆணையர் முன்னிலையில் பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டு மின் கட்டணம் ஏப்ரல் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.இதேபோல நடப்பு ஆண்டுக்கான மின் கட்டணம் கடந்த ஏப்ரலில் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் மின்சார கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய புதுச்சேரி அரசின் மின்துறை கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி 2023-24ம் ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான இழப்பை சரிசெய்ய மின் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

அதன்படி வீடுகளுக்கு 100 யூனிட் வரை யூனிட்டுக்கு 25 பைசா, 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு 40 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் வர்த்தக மின் கட்டணம் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு 66 பைசா, 250 யூனிட்டுக்கு மேல் 77 பைசா உயர்த்தப்படுகிறது. தெருவிளக்கு யூனிட்டிற்கு 78 பைசா, சிறு தொழிற்சாலைக்கு யூனிட்டிற்கு 70 பைசா, எல்.டி. தண்ணீர் தொட்டிக்கு யூனிட்டிற்கு 72 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு மின் கட்டணம் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

குடிசை தொழிலுக்கு 100 யூனிட் வரை யூனிட்டிற்கு 25 பைசா, 300 யூனிட்டிற்கு மேல் யூனிட்டிற்கு 75 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது. தொழிற்சாலைக்கு யூனிட்டிற்கு 60 பைசா, உயர்அழுத்த வர்த்தக நிறுவனங்களுக்கு யூனிட்டிற்கு 62 பைசா, விளம்பர பலகைகளுக்கு யூனிட்டிற்கு 59 பைசா கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது.

இந்த கூடுதல் கட்டணம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மின்கட்டண உயர்வால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் மின்கட்டண உயர்வை உடனே குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories