இந்தியா

மின்வெட்டு.. செல்போன் டார்ச் வெளிச்சதில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை: ஆந்திராவில் தொடரும் அவலம்!

ஆந்திராவில் மின்வெட்டு காரணமாக அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்வெட்டு.. செல்போன் டார்ச் வெளிச்சதில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை: ஆந்திராவில் தொடரும் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலம் மன்யம் மாவட்டத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இது பொதுமக்களை பாதிப்பது மட்டுமல்லாமல் மருத்துவர்களது பணிக்கும் இடையூறாக மாறியுள்ளது.

கடந்த வெள்ளியன்று ஆட்டோ ரிக்ஷா ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 8 பேர் மீட்கப்பட்டு மன்யம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

மின்வெட்டு.. செல்போன் டார்ச் வெளிச்சதில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை: ஆந்திராவில் தொடரும் அவலம்!

அப்போது இவர்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் தங்களது செல்போன் டார்ச் லைட்டை கொண்டு காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

"அரசு மருத்துவமனையில் அவசர உதவிக்கு என்று ஜெனரேட்டர்கள் கூட இல்லை?.. இதுதான் மக்களைப் பாதுகாப்பதா?" எனப் பலரும் சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories