மும்பையில், எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் வசந்தா(53) என்ற பெண் வேலை செய்து வருகிறார். இவர், போரிவலி என்ற இடத்தில் அடுக்கு மாடி கட்டிடத்தில் கீழ் தளத்தில் தனியே வசித்து வருகிறார். இவர் தனியே வாசிப்பதை அறிந்த ஒருவர் இரவு நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
இரவு துக்கத்தில் இருந்தபோது சத்தம் கேட்டு எழுந்த அந்த பெண் வீட்டில் தேடிப்பார்த்தபோது முகத்தை துணியால் மறைந்த ஒருவர் நின்றுகொண்டுள்ளார். மேலும், தான் திருடவந்திருப்பதாக கூறி அந்த பெண்ணை அந்த நபர் தாக்க முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைத்த அந்த பெண் கணநேரத்தில் சுதாரித்து, தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக கூறியுள்ளார். எனினும் அந்த நபர் அந்த பெண்ணை தாக்க வந்த நிலையில், தனது கையில் காயத்தை ஏற்படுத்திக்கொண்டு அந்த ரத்தத்தை அந்த நபர் மீது தெளித்துள்ளார்.
இதில் பயந்துபோன அந்த நபர் வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடியுள்ளார். இதன் பின்னர் அந்த பெண் அக்கம் பக்கம் இருந்த நபர்களை அழைத்து நடந்த இந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். எனினும் சம்பவம் நடந்த கட்டிடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிரமம் இருப்பதாக போலிஸார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.