இந்தியா

வயிற்று வலி.. மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: 3 மாதம் கழித்து தெரிந்த உண்மை!

ஆந்திராவில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் கத்திர்க்கோலை வைத்து மருத்துவர்கள் தைத்த சம்பவம் மூன்று மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வயிற்று வலி.. மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: 3 மாதம் கழித்து தெரிந்த உண்மை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலம் ஏலுருவில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் பிரசவத்திற்காகப் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது.

பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு எஸ்.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்குத் திரும்பினார். பிரசவம் முடிந்த பிறகும் அவருக்குத் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

அப்போது, சிசேரியன் செய்து குழந்தை பெற்றதால் ஏற்படும் வலி என கூறியுள்ளனர். இதனால் அவர் வயிற்று வலிக்கு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். இருப்பினும் வலி நிற்கவில்லை.

வயிற்று வலி.. மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: 3 மாதம் கழித்து தெரிந்த உண்மை!

இதனால் அவர் விஜயவாடா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது வயிற்றில் கத்தரிக்கோல் இருந்தது தெரியவந்தது. இது எப்படி வயிற்றுக்குள் சென்றது என விசாரித்தபோது, பிரசவத்தின் போது மருத்துவர்கள் தவறுதலாகக் கத்தரிக்கோலை வைத்துத் தைத்தது தெரியவந்தது. பின்னர் அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றிலிருந்து கத்தரிக்கோலை மருத்துவர்கள் அகற்றினர். தற்போ இந்த சம்பவம் வெளியே தெரிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories