ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் அவரது கணவருக்கு திடீரென்று உடல்நல பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் மருத்துவ செலவுக்கு போதுமான அளவு பணமில்லை என்பதால் கடன் வாங்க எண்ணியுள்ளார் அந்த பெண்.
அதன்படி தனக்கு தெரிந்தவர்களிடம் பணம் கேட்டும், அது கிடைக்கவில்லை என்பதால் வேறு வழியின்றி வட்டிக்கு கடன் வாங்க எண்ணியுள்ளார். எனவே அதே பகுதியைச் சேர்ந்த மெஹ்ரதின் என்பவரிடம் ரூ.10 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்துக்கு வட்டியாக ரூ.1000 மாதாமாதம் செலுத்த வேண்டும்.
இவ்வாறாக சில மாதங்கள் வட்டியை செலுத்தி வந்த அந்த பெண், ஒரு வழியாக ரூ.5000 அசலையும் கஷ்டப்பட்டு செலுத்தி விட்டார். எனவே மீதமுள்ள ரூ.5000 பணத்துக்கு ரூ.500 வட்டி செலுத்த வேண்டும். இந்த சூழலில் ஒரு மாதம் அந்த பெண்ணால் வட்டி பணத்தை கொடுக்க இயலவில்லை. எனவே அதனை வசூலிக்க மெஹ்ரதின் அந்த பெண் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அவர் சென்றிருந்த நேரம் அந்த பெண்ணின் கணவர் வெளியே சென்றிருந்தால், வீட்டில் தனியாக இருந்த அவரை மிரட்டி வலுக்கட்டாய படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டார். அந்த வீடியோவை வைத்து அவரை பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் வட்டிக்கு கடன் கொடுத்த மெஹ்ரதின்.
இருப்பினும் அந்த வீடியோவை மெஹ்ரதின், இணையத்தில் வெளியிட்டு விட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் குளத்தில் விழுந்து தற்கொலை செய்ய எண்ணியுள்ளார். அவரை காப்பாற்றிய அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
கடந்த 7-ம் தேதி அந்த பெண்ணிடம் விசாரித்த போலீசார், அவர் கொடுத்த புகாரின் பேரில் மெஹ்ரதின் மீது வழக்குப்பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட மெஹ்ரதினை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.500 வட்டி தரவில்லை என்பதால் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் செயல் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!