இந்தியா

பள்ளி சிறுவனை அடுத்தடுத்து தாக்கிய ஆசிரியர்கள்.. கொந்தளித்த குடும்பம் : இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி !

வீட்டுப்பாடம் முடிக்கவில்லை என்று பள்ளி சிறுவனை ஆசிரியர்கள் கடுமையாக தாக்கியதில் சிறுவன் உயிரிழந்துள்ளது மத்திய பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி சிறுவனை அடுத்தடுத்து தாக்கிய ஆசிரியர்கள்.. கொந்தளித்த குடும்பம் : இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பகோதபூர் என்ற பகுதியில் கோக் சிங் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கும் நிலையில், கடைசி பிள்ளையான கிருஷ்ணா (12) என்பவர் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சுமாராக படிக்கும் இவர், அடிக்கடி ஆசியர்களிடம் திட்டும், அடியும் வாங்குவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த 12ம் தேதி சிறுவன் கிருஷ்ணா வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வகுப்பு ஆசிரியரும் வழக்கம்போல் வீட்டு பாடத்தை யாரெல்லாம் முடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இந்த சிறுவனும் எழுந்து நிற்க, உடனே தான் வைத்திருந்த கம்பால் சிறுவனை அடித்துள்ளார்.

பள்ளி சிறுவனை அடுத்தடுத்து தாக்கிய ஆசிரியர்கள்.. கொந்தளித்த குடும்பம் : இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி !

தொடர்ந்து அடுத்தடுத்த வகுப்பில் ஆசிரியர்களிடம் பிரம்பால் சிறுவன் அடி வாங்கியுள்ளார். தொடர்ந்து வீட்டுக்கு சென்ற சிறுவன், கை கால்கள் வீங்கிய நிலையில் காணப்பட்டார். மேலும் வாந்தி எடுத்து மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இதனால் பதறியடித்த பெற்றோர், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் பள்ளிக்கு சென்று விசாரிக்கையில், சிறுவனை ஆசிரியர்கள் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து பள்ளிக்கு சென்ற தந்தை கோக் சிங், அவர்களிடம் ஞாயம் கேட்டு சண்டையிட்டுளார். இதனிடையே தொடர்ந்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்றைய முன்தினம்) பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து பள்ளி வளாகத்தின் முன் பெற்றோர், குடும்பத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி சிறுவனை அடுத்தடுத்து தாக்கிய ஆசிரியர்கள்.. கொந்தளித்த குடும்பம் : இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி !

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பள்ளி மீது புகார் அளிக்கப்பட்டது. அப்போது விசாரிக்கையில், சிறுவனை ஆசிரியர்கள் ஏற்கனவே ஒருமுறை தாக்கியதில் காய்ச்சல் வந்து 4 நாட்கள் அவதி பட்டுள்ளதும், இந்தமுறை தாக்கியபோது மாடியில் இருந்து தூக்கி வீசி விடுவதாக ஆசிரியர் ஒருவர் மிரட்டியதும் தெரியவந்தது.

பின்னர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டு சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டுப்பாடம் முடிக்கவில்லை என்று பள்ளி சிறுவனை ஆசிரியர்கள் கடுமையாக தாக்கியதில் சிறுவன் உயிரிழந்துள்ளது மத்திய பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories