இந்தியா

’என் தந்தையை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்’.. காவல் நிலையத்தில் புகார் கொடுத்த 12 வயது மகன்: என்ன காரணம்?

ஆக்ராவில் மதுவுக்கு அடிமையான தந்தை மீது 12 வயது மகன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

’என் தந்தையை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்’.. காவல் நிலையத்தில் புகார் கொடுத்த 12 வயது மகன்: என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள ஜெப்ரா கிராமத்தில் காவல்நிலையம் உள்ளது. இந்த காவல்நிலையத்திற்கு 12 வயது சிறுவன் ஒருவன் வந்துள்ளான். அப்போது அங்கிருந்த போலிஸார் சிறுவனிடம் காவல்நிலையத்திற்கு வந்த காரணம் என்ன என்று கேட்டுள்ளார்.

இதற்கு அந்த சிறுவன், "நான் எனது தந்தை மீது புகார் கொடுக்க வந்துள்ளேன்" என கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட போலிஸார் சிறுவனிடம் மேலும் விசாரணை செய்தனர். அப்போது, "எனது தந்தையின் பெயர் ஹரியோம். இவர் தினமும் குடித்துவிட்டு தனது தாயை பெல்ட் மற்றும் இரும்பு பைப்பால் அடித்து கொடுமைப் படுத்துகிறார்.

’என் தந்தையை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்’.. காவல் நிலையத்தில் புகார் கொடுத்த 12 வயது மகன்: என்ன காரணம்?

இதனால் அவரை கைது செய்ய வேண்டும்" என கூறியுள்ளார். உடனே போலிஸார் சிறுவன் வீட்டிற்குச் சென்றனர். அங்கிருந்த சிறுவனின் தந்தை ஹரியோவை கைதுசெய்து காவல்நிலையம் அழைத்து வந்தனர்.

பின்னர் மனைவியை இனி அடிக்கமாட்டேன் என கூறியதை அடுத்து போலிஸார் அவரை விடுவித்தனர். இந்த சம்பவம் குறித்துக் கூறிய போலிஸார், "இதுபோன்ற சம்பவங்கள் குறித்து குழந்தைகள் காவல்நிலையத்திற்கு வந்து புகார் கொடுப்பது அரிது. சிறுவனின் தைரியத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories