இந்தியா

புதிய தம்பதிகளுக்கு ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் வழங்கிய பா.ஜ.க அரசு.. இலவச திருமண திட்டத்தில் அவலம்!

மத்திய பிரதேசத்தில் இலவச திருமண திட்டத்தில் புதிய தம்பதிகளுக்கு வழங்கப்பட்ட பரிசு தொகுப்பில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

புதிய தம்பதிகளுக்கு ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் வழங்கிய பா.ஜ.க அரசு.. இலவச திருமண திட்டத்தில் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.கவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்த மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் திருமணத்திற்காக ரூ.55 ஆயிரம் நிதி வழங்கும் திட்டம் 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜாபுவா மாவட்டத்தில் 296 பெண்களுக்கு இலவச திருமண திட்டத்தின்படி அரசு சார்பில் திருமண விழா நடைபெற்றது. அப்போது புதிய தம்பதிகளுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

புதிய தம்பதிகளுக்கு ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் வழங்கிய பா.ஜ.க அரசு.. இலவச திருமண திட்டத்தில் அவலம்!

இந்த பரிசுப் பொருட்களில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் இருந்ததைப் பார்த்து தம்பதிகள் அதிர்ச்சியடைந்தனர். இது தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்குக் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள், "குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது" என விளக்கம் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் சிவராஜ் சிங் தலைமையில் நடந்த இலவச திருமண திட்டத்தில் மணப் பெண்களுக்குக் கருத்தரிப்பு பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories