இந்தியா

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த பா.ஜ.க தலைவர் ஈஸ்வரப்பா.. அமைதியாக வேடிக்கை பார்த்த அண்ணாமலை!

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த பா.ஜ.க தலைவர் ஈஸ்வரப்பா.. அமைதியாக வேடிக்கை பார்த்த அண்ணாமலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து மே 13ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். இது பா.ஜ.கவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பா.ஜ.க ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக உள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது தேர்தலில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தேர்தல் கணிப்புகளும் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாகவே உள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த பா.ஜ.க தலைவர் ஈஸ்வரப்பா.. அமைதியாக வேடிக்கை பார்த்த அண்ணாமலை!

இதனால் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் கர்நாடகாவில் தமிழர்களின் ஓட்டுகள் அதிகம் உள்ளதால் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாகப் பெங்களூரில் சிவாஜி நகர், சாம்ராஜ்பேட்டை, காந்தி நகர், சாந்தி நகர் பகுதியில் தமிழக மக்களின் ஓட்டுகள் உள்ளது. மேலும் பா.ஜ.கவின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஈஸ்வரப்பா தொகுதியில் சிவமொக்காவிலும் தமிழர்களின் வாக்குகள் அதிகம் உள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த பா.ஜ.க தலைவர் ஈஸ்வரப்பா.. அமைதியாக வேடிக்கை பார்த்த அண்ணாமலை!

இந்நிலையில்தான் இன்று சிவமொக்கா என்.இ.எஸ் மைதானத்தில் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மூத்த தலைவர் ஈஸ்வரப்பா மற்றும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உட்படப் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் சிறிது நிமிடத்திலேயே பாட்டை நிறுத்தும் படி ஈஸ்வரப்பா கூறினார். பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிபரப்ப வேண்டாம், யாராவது வந்து பாடினால் பாடுங்கள் என கூறி கன்னடத் தாய் வாழ்த்து பாடலை பாட வைத்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த தமிழக மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories