இந்தியா

கர்நாடகா : ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென பற்றி எரிந்த பேருந்து.. உள்ளே இருந்த 30 பயணிகளின் நிலை என்ன ?

கர்நாடகாவில் ஓடிக்கொண்டிருந்தபோது திடீரென பேருந்து பற்றி தீப்பிடிப்பதை கண்ட ஓட்டுநரின் சாதுர்யத்தால் 30 பயணிகள் எந்த வித பாதிப்பும் இன்றி உயிர் பிழைத்துள்ளனர்.

கர்நாடகா : ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென பற்றி எரிந்த பேருந்து.. உள்ளே இருந்த 30 பயணிகளின் நிலை என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில் பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சாம்ராஜ்பேட் பகுதியில் உள்ள மக்கள கூட்டா பார்க் அருகே 30 பயணிகளுடன் இந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஸ்ரீரங்கப்பட்டிணா அருகே கனங்கூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடிக்க தொடங்கியது.

கர்நாடகா : ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென பற்றி எரிந்த பேருந்து.. உள்ளே இருந்த 30 பயணிகளின் நிலை என்ன ?

இந்த தீயை கண்டதும் பதறி போன ஓட்டுநர், உடனடியாகி சாலையின் ஓரத்தில் பேருந்தை நிறுத்தியதோடு, பயணிகளையும் உடனே இறங்கி வருமாறு அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேருந்து தீப்பிடிக்க தொடங்கியதும், அதில் இருந்த பயணிகள் தப்பித்து தலைதெறிக்க அங்கிருந்து ஓடினர். அனைவரும் ஓடிய பின்னர் பேருந்து கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

கர்நாடகா : ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென பற்றி எரிந்த பேருந்து.. உள்ளே இருந்த 30 பயணிகளின் நிலை என்ன ?

தொடர்ந்து அதில் இருந்த பயணி ஒருவர் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு உடனே தகவல் தெரிவித்தார். மேலும் காவல்துறைக்கும் தெரிவித்தார். சம்பவத்தை கேட்டதும் உடனே வந்த மீட்பு குழு, பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை நீண்ட நேர முயற்சிக்கு பின்னர் அணைத்தனர்.

கர்நாடகா : ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென பற்றி எரிந்த பேருந்து.. உள்ளே இருந்த 30 பயணிகளின் நிலை என்ன ?

தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அப்போது பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து இலேசான கரும்புகை வந்ததை ஓட்டுநர் பார்த்ததும், உடனே சாலையில் வாகனத்தை நிறுத்தி பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனாலே உயிர் சேதம் எதுவுமில்லாமல் போனதற்கு காரணம் என்று தெரியவந்தது.

கர்நாடகா : ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென பற்றி எரிந்த பேருந்து.. உள்ளே இருந்த 30 பயணிகளின் நிலை என்ன ?

மேலும் உள்ளிருந்த பயணிகள் யாருக்கும் லேசான காயம் இன்றி கூட தப்பித்ததும், ஆனால் அவர்கள் கொண்டு வந்த உபகரணங்கள் தீயில் சிக்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து அந்த தீ எப்படி பற்றி கொண்டது, வேறெங்கும் பேருந்து நின்றதா? இது திட்டமிட்ட சதியா? அல்லது விபத்தா என்ற கோணத்தில் இதுகுறித்து தீவிரமாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகா : ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென பற்றி எரிந்த பேருந்து.. உள்ளே இருந்த 30 பயணிகளின் நிலை என்ன ?

முன்னதாக கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து அமராவதிக்கு காலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் திடீரென இன்ஜினில் இருந்து வந்த புகையை கண்டதும் ஓட்டுநர் அதனை நிறுத்தியுள்ளார். மேலும் அதில் இருந்த 16 பயணிகளுக்கும் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டு உடனே தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் கீழே இறங்கினர்.

அந்த பேருந்தின் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அதில் இருந்த 16 பயணிகளும் எந்த வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். தற்போதும் அதே போல் கர்நாடகாவில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories