தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாணவர்களும் பயின்று வரும் இங்கு, அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு அவரது ஜூனியர் மாணவருடன் நட்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் தினமும் மொபைல் பேசியில் பேசிக்கொண்டிருந்த நிலையில், நாளடைவில் அது காதலாக மாறியது. இவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர். தொடர்ந்து இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பெண், ஜூனியர் பையனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மாறாக அவரது சீனியருடன் பேசி பழகி வந்துள்ளார்.
இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்துள்ளது. இருப்பினும் அந்த பெண், தனது சீனியருடன் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜூனியர், அந்த பெண்ணின் புகைப்படங்களையும், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் அந்த கல்லூரியில் படிக்கும் சில மாணவர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
இது அந்த இளம்பெண்ணுக்கு தெரிய வரவே, அவர் ஜூனியரிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் தன்னை பற்றி மற்றவர்கள் தவறாக பேசுவதாக எண்ணி, கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் இந்த சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பின்னர் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு தலைமறைவாகியுள்ள அந்த இளைஞரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் !