இந்தியா

263 மில்லியன் டாலர் கடன் பெற்று மோசடி செய்த வினோத் அதானி.. அடுத்த புயலைக் கிளப்பிய Forbes அறிக்கை!

அதானி குழும நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கை கூறிய நிலையில் வினோத் அதானி ரஷ்ய வங்கியில் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக போர்பஸ் அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

263 மில்லியன் டாலர் கடன் பெற்று  மோசடி செய்த வினோத் அதானி.. அடுத்த புயலைக் கிளப்பிய Forbes அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் என 17 பில்லியன் டாலர்கள் வரை மோசடி செய்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டு இந்தியாவில் பெரும் புயலை கிளப்பியதை அடுத்து அதானி நிறுவனத்தின் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர்.

263 மில்லியன் டாலர் கடன் பெற்று  மோசடி செய்த வினோத் அதானி.. அடுத்த புயலைக் கிளப்பிய Forbes அறிக்கை!

இதையடுத்து அதானி நிறுவனத்தின் முறைகேடு குறித்துச் செபி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மோசடி குற்றச்சாட்டால் அதானி நிறுவனத்தின் பங்குகள் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் உலகில் 3-வது பணக்காரர் பட்டியலில் இருந்த அதானி ஒரேவாரத்தில் 10க்கு மேல் தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி ரஷ்ய வங்கியில் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக போர்ப்ஸ் பத்திரிக்கை மற்றொரு பீதியை கிளப்பியுள்ளது.

அதானி குழும நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களைக் கவனித்து வருவது வினோத் அதானிதான். துபாய், சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அதானி குழுமத்துடன் தொடர்பில் உள்ள பிற நிறுவனங்களின் வணிகத்தை இவர்தான் கவனித்து வருகிறார்.

வினோத் அதானியின் மறைமுக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சிங்கப்பூரைச் சேர்ந்த வணிகம் மற்றும் முதலீட்டு நிறுவனம் பினாக்கிள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் 2020ம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த விடிபி வங்கியில் 263 மில்லியன் டாலர் கடன் பெற்றுள்ளார் வினோத் அதானி.

இந்த கடன் உக்ரைன் - ரஷ்யா போரின்போது 2021ம் ஆண்டு ஏப்ரலில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த 263 மில்லியன் டாலர் கடனில் இருந்து 258 மில்லியன் டாலர் பணத்தைப் பெயரிடப்படாத பங்குகளுக்கு ஒதுக்கியுள்ளதாக போர்ப்ஸ் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

263 மில்லியன் டாலர் கடன் பெற்று  மோசடி செய்த வினோத் அதானி.. அடுத்த புயலைக் கிளப்பிய Forbes அறிக்கை!

ரஷ்ய வங்கியிலிருந்து பெற்ற கடன் தொகைக்கான உத்தரவாதமாக ஆஃரோ ஏசியா, வேர்ல்டுவைடு ஆகிய இரு நிறுவனங்களை பினாங்கின் குறிப்பிட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் அதானி குழுமத்தின் பங்குதாரர்களுக்குச் சொந்தமானது என்றும் போர்ப்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,"அதானி குழுமத்தின் மோசடியில் தொழிலதிபர் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியின் முக்கிய பங்கு செபி, அமலாக்கத்துறை விசாரணைக்குத் தகுதியானதில்லையா?" என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories