மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் வசித்து வருபவர் ஜெகன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லக்ஷ்மிபாய் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமானது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
ஆனால், அதன்பிறகு சில மாதங்கள் கழித்து இருவருக்குமிடையே கணவன் - மனைவிக்குள் நடக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இருவருக்கும் இடையே வழக்கம்போல் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது லக்ஷ்மிபாய் தனது கணவர் ஜெகனிடம் "உனக்கு இனி சமைத்து போடா முடியாது" என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரப்பட்டு ஜெகன், அவரது மனைவியை வசைபாடியுள்ளார். இது கைகலப்பாக மாறவே, அருகிலிருந்த மரக்கட்டையை எடுத்து லட்சுமியின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் கடுமையாக காயமுற்றார் லட்சுமி. பின்னர் அவரே தானாக சென்று மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்து, தனது கணவர் மீது புகாரும் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், ஜெகனை கைது அதிரடியாக கைது செய்தனர். சில மாதங்கள் கழித்து ஜெகன் ஜாமீனில் வெளியே வந்தார். இருப்பினும் தொடர்ச்சியாக இது வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து நேற்று நீதிபதி ரச்சனா தீர்ப்பளித்தார். அதன்படி மனைவியை கடுமையாக தாக்கிய ஜெகன் குற்றவாளி என்று நிரூபணமாகியுள்ளது. எனவே குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். நீதிபதியின் தீர்ப்பை தொடர்ந்து ஜெகன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மனைவியை கடுமையாக தாக்கிய வழக்கில் கணவருக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.