‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கையைத் தொடர்ந்து, உலகளாவிய நிதி நிறுவனங்கள் பலவும் அதானி குழுமத்தின் மதிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றன. அதானி குழுமப் பத்திரங்களுக்கு எந்தவித மதிப்பும் இல்லை என்று அறிவித்து வருகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டி குழுமம் (Citigroup) மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (Credit Suisse) நிறுவனங்கள், அதானி குழுமப் பத்திரங்களுக்கு கடன் வழங்குவதை நிறுத்தி விட்டன. பிரபல பிரிட்டிஷ் வங்கியான ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ (Standard Chartered) நிறுவனம், “அதானி குழுமப்பத்திரங்களை கடனுக்குப் பிணையமாக ஏற்றுக் கொள்ள முடியாது” என்று அறிவித்தது.
தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி, இந்த பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ கூறியது. அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனம் என்ற அடிப்படையில், லண்டனை சேர்ந்த ‘எலாரா கேபிடல்’ நிறுவன செயல்பாடுகளை இங்கிலாந்தின் நிதி நடத்தை ஆணையம் (Financial Conduct Authority - FCA) தனது தீவிர கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளது.
இதில் முக்கியமாக உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ் டர்ஸ் சர்வீஸ், அதானி க்ரீன் எனர்ஜி உட்பட அதானி குழுமத்தின் நான்கு நிறுவனங்களின் கண்ணோட்டத்தை நிலையானது (“Stable”) என்ற தகுதி நிலையை எதிர்மறை (“Negative”) நிலைக்கு குறைத்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டின் இறுதியில் 1.35 டிரில்லியன் டாலர் நிதியை அதானியின் டோட்டல் கேஸ், அதானி துறைமுகங்கள் & சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், அதானி கிரீன் எனர்ஜி ஆகியவற்றில் நார்வே மியூச்சுவல் பண்ட் நிறுவனம் வைத்திருந்தது.
இதில், 200 மில்லியன் டாலருக்கும் மேலாக அதானி குழுமத்தின், மூன்று நிறுவன பங்கினை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே அதானி குழுமத்தில் இருந்து பங்குகளை குறைக்க ஆரம்பித்துள்ளதாகவும், தற்போது வரையில் அதானி குழுமத்தில் உள்ள பங்குகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இவை எல்லாவற்றையும் விட, மோர்கன் ஸ்டான்லி சர்வதேச மூலதன நிறுவனமும் (Morgan Stanley Capital International - MSCI) அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ‘ப்ரீ ப்லோடிங்’ தகுதியை நீக்க முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏசிசி ஆகிய 3 நிறு வனங்களின் தகுதிகளையும் நீக்க திட்ட மிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
மோர்கன் ஸ்டான்லி நிறுவனம், உலகளாவிய முதலீட்டு சந்தை குறியீடுகளுக்காக (GIMI) அதானி குழுமத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட பத்திரங்களின் தகுதி மற்றும் ப்ரீ ப்ளோட் தகுதி நிர்ணயம் குறித்துச் சந்தை பங்கேற்பாளர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்று வந்தது.
இந்நிலையில், அந்தக் கருத்துக்களை அடிப்படையாக வைத்து பிப்ரவரி மாத ஆய்வில் மறுஆய்வுக்கு உள்ளாக்கி, அதானி குழும நிறுவனங்களின் தகுதிகளைக் குறைத்துள்ளது. அதானி குழும நிறுவனங்களில் எல்.ஐ.சி (LIC) ரூ. 36 ஆயிரத்து 474 கோடியே 78 லட்சத்தை முதலீடு செய்திருந்த நிலையில், அந்த பங்குகளின் மதிப்பு, ரூ. 74 ஆயிரம் கோடி என்ற அளவிற்கு கூடியிருந்தது.
அது தற்போது ரூ. 43 ஆயிரம் கோடியாக சரிந்துள்ளது. அதானி குழும நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் கோடியை வங்கிகளிடமிருந்து கடனாக பெற்றிருந்தன. இதில், அதானி இந்தியாவில் வாங்கியிருக்கும் கடன்களில் 90 சதவிகிதம், பொதுத்துறை வங்கிகளால் வழங்கப்பட்டவை.
அதானி குழுமத்திற்கு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரூ. 22 ஆயிரம் கோடி, பஞ்சாப் நேசனல் வங்கி ரூ. 7 ஆயிரம் கோடி, பாங்க் ஆப் பரோடா ரூ.7 ஆயிரம் என கடன்களை வழங்கியுள்ள நிலையில், இந்த வங்கிகளின் பங்கு மதிப்பும் அடிவாங்கியுள்ளது. இந்திய மக்களின் சேமிப்பிலிருந்து அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் திரும்ப வருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய மக்களின் சேமிப்பு சூறையாடப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இதையொட்டி, பங்குச்சந்தை திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளதால் சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைக் கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான ‘செபி’ (SEBI)-க்கு, இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வும் தனது கேள்விகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகத்துடன் ஆலோச னை நடத்தி பிப்ரவரி 13-ஆம் தேதிக்குள் தெரி விக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மொரீஷியஸ் நிறுவனங்கள் குறித்து ‘செபி’ விசாரணை
இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யும், அதானி குழுமத்தின் ரத்து செய்யப்பட்ட 20000 கோடி ரூபாய் மதிப்பி லான பங்கு விற்பனையில் பங்குபெற்ற சில ஆங்கர் முதலீட்டாளர்களை விசாரித்து வரு கிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. “கிரேட் இன்டர்நேஷனல் டஸ்கர் பண்ட் மற்றும் ஆயுஷ்மத் லிமிடெட் மட்டும் அல்லாமல், பங்கு வழங்குவதில் இடம்பெற்ற 10 முத லீட்டு வங்கிகளில் எலாரா கேபிடல் மற்றும் மோனார்க் நெட்வொர்த் கேபிடல் ஆகிய இரு நிறுவனங்களையும் ‘செபி’ ஆய்வு செய்து வரு வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விரு நிறு வனங்கள் மீது ‘ஷேர் ஆபரிங்’கில் (Share Offering) விதிமுறை மீறப்பட்டு உள்ளதா? என்று விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதானி குழுமத்தின் மொத்தக் கடன் ரூ. 3.39 லட்சம் கோடி
அதானி குழுமத்தின் மொத்தக் கடன் அளவு 41.1 பில்லியன் டாலர்- இந்தியா ரூபாய் மதிப்பில் 3.39 லட்சம் கோடி ரூபாய் என்று ‘நிக்கி ஏசியா’ தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள் ளது. இது இந்தியப் பொருளாதார மதிப்பில் 1.2 சதவிகிதம் எனவும் அறிவித்துள்ளது. அதானி குழுமத்தின் கீழ் இருக்கும் 7 நிறு வனங்கள் மற்றும் சமீபத்தில் கைப்பற்றிய ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ், என்டிடிவி என மொத்த முள்ள 10 நிறுவனங்கள், உள்நாட்டிலும், வெளி நாட்டிலுமாக வைத்துள்ள மொத்த கடன் அளவு தான் இந்த 3.39 லட்சம் கோடி ரூபாய் என்றும் நிக்கி ஏசியா அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வளவுக்கு இடையிலும், அதானி குழும நிறுவனங்களின் மீதான மதிப்பைத் தூக்கி நிறுத்தும் முயற்சியில் பாஜக ஆட்சியாளர்களும், ஒன்றிய அரசும் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதானி குழுமத்துக்கு தாராவி சீரமைப்பு திட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டதற்கான அர சாணை விரைவில் வெளியிடப்படும் என்று மகாராஷ்டி மாநில துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி யான தாராவியை ரூ. 23 ஆயிரம் கோடி செல வில் சீரமைக்கும் ஒப்பந்தம் அதானி குழு மத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஊழல் குற்றச் சாட்டால், தாராவி சீரமைப்பு திட்ட ஒப்பந்தம் அதானி வசம் தொடருமா? என்று சந்தேகங்கள் எழுந்தன.
ஆனால், தாராவி சீரமைப்புத் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என துணை முதல்வரும், மகாராஷ்டிர மாநில வீட்டு வசதித்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
“அரசாணை வெளியிடும் முன் சில முக்கிய வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டி யுள்ளது. அதன்பின் விரைவில் அரசாணை வெளியிடப்படும். தாராவி சீரமைப்பு திட்டம் முடிக்கப்படும். நாங்கள் தாராவியைக் கையில் எடுத்து உள்ளோம். பென்டி பஜாரில் சீரமைப்பு திட்டத்தை மேற்கொள்ள முடியும் போது, தாராவி யிலும் முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று பட்னாவிஸ் கூறியுள்ளார்.
“அதானி குழுமத்தின் நம்பகத்தன்மையில் சந்தேகமும், கேள்வியும் எழுந்து உள்ளதால் தாராவி சீரமைப்பு திட்ட ஒப்பந்தம் தொடர்பாக அரசாணை பிறப்பிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்” என மும்பை காங்கிரஸ் செயல் தலைவர் சரண்சிங் சப்ரா, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதி உள்ளார். தாராவி சீரமைப்பு திட்ட ஒப்பந்தத்திற்கான ஆரம்பவிலை ரூ. 3 ஆயிரத்து 150 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
பின்னர் இந்த தொகை ரூ.1,600 கோடியாக குறைக்கப் பட்டது. இந்த நிலையில் அதானி குழுமம் ரூ.5 ஆயிரத்து 69 கோடிக்கு தாராவி சீரமைப்பு ஒப்பந்தத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, அதானி துறைமுகங்கள் - சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய இரு நிறு வனங்களை, தேசிய பங்குச் சந்தை அமைப்பான ‘நிப்டி’ (NIFTI), கூடுதல் கண்காணிப்பு கட்ட மைப்பிலிருந்து நீக்கியுள்ளது.
‘அதானி எண்டர்பிரைசஸ், அதானி துறை முகங்கள் - சிறப்புப் பொருளாதார மண்ட லங்கள் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ்’ ஆகிய மூன்று அதானி குழும நிறுவனங்களை, தேசிய பங்குச் சந்தை அமைப்பான ‘நிப்டி’ (NIFTI), பிப்ரவரி 3-ஆம் தேதி குறுகிய கால கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளின் (ASM) கீழ் வைத்தது. ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கையால் அதானி குழும பங்குகள் பலத்த சரிவைச் சந்தித்த நிலையில், அதிகளவிலான சரிவு, தடுமாற்றத்தைத் தடுக்கவும், முதலீட்டாளர் நலனுக்காகவும் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறியது. இந்நிலையில், தற்போது கண்காணிப்பிலிருந்து அதானி நிறுவனங்களை விடுவித்துள்ளது.
- நன்றி தீக்கதிர்.