இந்தியா

டெல்லியில் குடியரசு தினம்: தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் இடம்பெற்ற முக்கிய பெண்கள்.. சிறப்பம்சங்கள் என்ன?

ஒளவையார் முதல் வேலுநாச்சியார் வரையுள்ள தமிழ்நாட்டின் அடையாளமாக காணப்படும் பெண்களின் உருவம் டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றது.

டெல்லியில் குடியரசு தினம்: தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் இடம்பெற்ற முக்கிய பெண்கள்.. சிறப்பம்சங்கள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 74-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் கடமைப்பாதையில் நடைபெற்று வரும் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து 23 மாநிலங்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. அதோடு இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி கலந்து கொண்டுள்ளார்.

டெல்லியில் குடியரசு தினம்: தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் இடம்பெற்ற முக்கிய பெண்கள்.. சிறப்பம்சங்கள் என்ன?

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, அசாம், ஜம்மு - காஷ்மீர், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட 23 மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் ஒவ்வொரு மாநிலம் சார்ந்த கலாச்சாரமும், முக்கியத்துவமும் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் இந்தாண்டு தமிழ்நாடு சார்பாக டெல்லியில் நடைபெற்ற அணிவகுப்பில் ஒளவையார் முதல் வேலுநாச்சியார் வரை பெண்கள் மட்டுமே முக்கிய பங்கு வகித்தனர்.

டெல்லியில் குடியரசு தினம்: தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் இடம்பெற்ற முக்கிய பெண்கள்.. சிறப்பம்சங்கள் என்ன?

தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் சங்க காலம் முதல் சமூக மாற்றத்துக்கு உதவிய பெண்கள் வரை இடம்பெற்றிருந்தது. மேலும் இது அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் காணப்பட்டது.

டெல்லியில் குடியரசு தினம்: தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் இடம்பெற்ற முக்கிய பெண்கள்.. சிறப்பம்சங்கள் என்ன?

அந்த ஊர்தியில் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தனை இயற்றிய ஒளவையார், கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக வீரத்துடன் போரிட்ட வீர மங்கை வேலுநாச்சியார், மூவலூர் ராமாமிர்தம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி, முத்துலட்சுமி ரெட்டி, இயற்கை விவசாயி பாப்பம்மாள் உள்ளிட்டோர் உருவங்கள் இடம்பெற்றன.

டெல்லியில் குடியரசு தினம்: தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் இடம்பெற்ற முக்கிய பெண்கள்.. சிறப்பம்சங்கள் என்ன?

மேலும் இதில் தமிழ்நாட்டின் அடையாளமாக காணப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் உருவமும் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து தமிழ்நாட்டின் இசை ஒலித்தது. அப்போது எம்.எஸ்.சுப்புலட்சுமியின் "காற்றினிலே வரும் கீதம்.." என தொடங்கியது.

டெல்லியில் குடியரசு தினம்: தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் இடம்பெற்ற முக்கிய பெண்கள்.. சிறப்பம்சங்கள் என்ன?

அதைத்தொடர்ந்து ஒளவையாரின் கொன்றை வேந்தன் பகுதியில் இருந்து "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்..", "எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்.." என்ற வரிகளும், மற்றொரு வரிகளான "தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை..", "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.." என்ற வரிகளும் ஒலித்தன. இதனுடன் தமிழ்நாட்டின் கும்மி பாட்டில் வரும் "தந்தானே தானே.." என்ற வரிகளும், பாரம்பரிய இசை நாதஸ்வரம், மேளம் உள்ளிட்டவையும் ஒலித்தது.

டெல்லியில் குடியரசு தினம்: தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் இடம்பெற்ற முக்கிய பெண்கள்.. சிறப்பம்சங்கள் என்ன?

இதற்கு தமிழ்நாட்டின் சார்பாக அங்கே சென்ற கலைஞர்கள் அணிவகுப்பில் பங்கேற்று சிறப்பாக முடித்தனர். இதனை கண்ட அங்கிருந்த குடியரசு தலைவர் முதல், பார்வையாளர்கள் வரை உற்சாகமாக கண்டு களித்தனர். தொடர்ந்து மற்ற மாநிலங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

banner

Related Stories

Related Stories