முன்பெல்லாம் அன்றாடம் நாம் உட்கொள்ளும் உணவுகள் வீட்டிலிருந்தே சமைக்கப்பட்டதாக இருந்தது. வேலைக்கு செல்லும் அனைவரும் வீட்டில் இருந்து எடுத்து செல்வது வழக்கமாக இருந்தது. காலப்போக்கில் அது சிறிய ஹோட்டேல், பெரிய ஹோட்டலாக மாறியது.
இப்படி கடைக்கு வெளியே தேடி தேடி அழைந்து ருசியான சாப்பாடு வாங்குவதற்கு, நமக்கு யாரேனும் வாங்கி வந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் என்னவே, அதற்காக உருவாக்கப்பட்டதுதான் உணவு டெலிவெரி செய்யும் ஆப்கள்.
தற்போதுள்ள காலகட்டத்தில், உபர், சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற சில உணவு டெலிவெரி செய்யும் ஆப்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்விக்கிதான் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதா அண்மையில் ரிப்போர்ட் ஒன்றும் வெளியானது. இருப்பினும் சொமேட்டோ பிரியர்களுக்கு அதிகமானோர் இருக்கின்றனர்.
இதுபோன்ற செயலிகள் இளைஞர்கள் மத்தியில் பெரும்பாலும் வரவேற்கப்பட்டுள்ளது. பலரும் இங்கே தினசரி உணவு ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிடுகின்றனர். இப்படி இருக்கையில் இதனை மேலும் மெருகேத்திடும் விதமாக டெலிவரி வித்இன் 10 மினிட்ஸ் என்ற ஒரு விஷயத்தை அறிமுகம் செய்தது சொமேட்டோ.
இதற்கு டெலிவரி செய்யும் வேலையை ஆண்கள், பெண்கள் என அனைவரும் செய்து வருகின்றனர். சிலருக்கு இது பார்ட் டைமாகவும், சிலருக்கு புல் டைம் வெளியாகவும் இது இருக்கிறது.
மக்களிடம் வரவேற்பை பெற்று வரும் சொமேட்டோ, தற்போது தங்கள் காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என தெரிவித்துள்ளது.
அதவாது சொமேட்டோவின் ஜெனரலிஸ்ட், வளர்ச்சி மேலாளர், மென்பொருள் டெவலப்மெண்ட் பொறியாளர் உட்பட 5 பிரிவுகளில் உள்ள பணி வாய்ப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இங்கு காலியாக இருக்கும் 800 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.
முன்னதாக கூகுள், மைக்ரோசாப்ட், பைஜூஸ், Wipro, ட்விட்டர், முகநூல், ஸ்பாட்டிபை என பல நிறுவனங்கள், போதிய வருமானம் இல்லை என்று காரணத்தை கூறி தங்கள் ஊழியர்களை பணியிலிருந்து விலக்குகின்றனர். இந்த நிலையில், தற்போது சொமேட்டோ வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.