இந்தியா

4 நாட்கள் முயற்சி.. 400 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம் :ம.பியில் அதிர்வலை !

400 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 8 வயது சிறுவன் தவறி விழுந்துள்ள சம்பவத்தில், தற்போது அந்த சிறுவன் உயிரிழந்துள்ள நிகழ்வு மத்திய பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 நாட்கள் முயற்சி.. 400 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம் :ம.பியில் அதிர்வலை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மக்கள் தங்களது வீடுகளிலோ அல்லது வயல்வெளிகளிலோ தண்ணீர் எடுப்பதற்காக போர் போடுவர். இவ்வாறு ஆழ்துளை கிணறு தோண்டுவதற்காக போர் போடும்போது சுமார் 400, 500 அடி வரை குழி விழும். ஆனால் அங்கு தண்ணீர் இல்லை என்று தெரிந்ததும் அந்த குழாயை மூடாமல் விட்டு விடுவர். சிலர் மூடினாலும், அது நாளடைவில் மண்ணரிப்பு போல் உருவாகி மீண்டும் குழி விழும்.

இந்த குழி பல குழந்தைகளுக்கு சவக்குழியாகவே மாறுகிறது. இந்தியாவில், தமிழ்நாட்டில், உலக அளவில் இது போன்ற விபத்தில் பல குழந்தைகள் இறந்துள்ளனர். அதில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைகள் வெறும் சிலரே. அப்படி இது போன்ற ஆழ்துளை கிணறு குழியில் 8 வயது சிறுவன் ஒருவன் விழுந்துள்ளார்.

4 நாட்கள் முயற்சி.. 400 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம் :ம.பியில் அதிர்வலை !

மத்திய பிரதேச மாநிலம் பீட்டல் என்ற பகுதிக்குயில் மாண்டவி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் 8 வயது சிறுவன் ஒருவன் அந்த பகுதி திறந்தவெளி இடத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்த ஆழ்துளை கிணறு குழி மூடாமல் இருந்துள்ளது. அதனை கவனிக்காத சிறுவன் கால் இடறி அதனுள் விழுந்துள்ளார்.

சிறுவன் நீண்ட நேரமாகியும் காணாததால் பதறிப்போன பெற்றோர் அவரை, தேடியுள்ளனர். பின்னர் சிறுவன் சுமார் 400 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து பதறிப்போன பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உதவியை நாடினர். பதறிப்போய் அவர்கள் இது குறித்து தீயணைப்பு துறை, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

4 நாட்கள் முயற்சி.. 400 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம் :ம.பியில் அதிர்வலை !

தொடர்ந்து விரைந்து வந்த அவர்கள் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுவன் 60 அடி ஆழத்தில் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்ட அவர்கள் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தனர். தற்போது இவர்கள் அனைவரும் சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

மேலும் குழியில் இருக்கும் சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்படாமல் இருக்க, தொடர்ந்து அவருக்கு ஆக்சிஜன் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. சிறுவனை உயிருடன் மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முழுமூச்சில் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது அந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 6-ம் தேதி குழியில் விழுந்த சிறுவன், நேற்று இரவு நேரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல் தற்போது உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 நாட்கள் முயற்சி.. 400 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம் :ம.பியில் அதிர்வலை !

முன்னதாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் சுர்ஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிகழ்வு தமிழ்நாட்டில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories