இந்தியா

“விபத்துல இறந்தா 2 கோடி..” - மனைவியை கொன்று விபத்து போல் நாடகமாடிய கணவன்.. ராஜஸ்தானில் அதிர்வலை !

மனைவி இறந்த 1 மணி நேரத்தில் Insurance அலுவலகம் சென்று ரூ.2 கோடி வாங்கி வந்த கணவரை ராஜஸ்தான் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

“விபத்துல இறந்தா 2 கோடி..” - மனைவியை கொன்று விபத்து போல் நாடகமாடிய கணவன்.. ராஜஸ்தானில் அதிர்வலை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சந்திரா - ஷாலு தேவி தம்பதி. இவர்களுக்கு கடந்த 2015-ல் திருமணமாகி தற்போது ஒரு மகள் இருக்கும் நிலையில், இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ஏனெனில், ஷாலு வீட்டில் தருவதாக கூறிய வரதட்சணையை அவர்கள் கொடுக்கவில்லை.

இதனால் இவர்களுக்குள்ள அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதால், தனது மனைவியை கொலை செய்ய எண்ணியுள்ளார். ஆனால் அவரை கொலை செய்தால் தனக்கு எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்த மகேஷ், இன்சூரன்ஸ் பற்றி கேள்விப்பட்டார். அதன்பேரில், தனது மனைவி பெயரில் கடந்த ஆண்டு ரூ.2 கோடி இன்சூரன்ஸ் போட்டுள்ளார்.

“விபத்துல இறந்தா 2 கோடி..” - மனைவியை கொன்று விபத்து போல் நாடகமாடிய கணவன்.. ராஜஸ்தானில் அதிர்வலை !

ஆனால் யார் பெயரில் இன்சூரன்ஸ் இருக்கிறதோ, அவர்கள் இயற்கையான முறையில் இறந்தால் ரூ.1 கோடியும், விபத்தில் இறந்தால் ரூ.1.90 கோடியும் அவரது குடும்பத்தாருக்கு போகும். ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகே அப்படி செய்யமுடியும் என்பதால், ஒரு வருட காலமாக கண்ணும் கருத்துமாக பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதத்துடன் 1 வருடம் முடிந்த நிலையில், தனது மனைவியை கொலை செய்ய கூலிப்படை வைத்து ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி தனது மனைவியின் இறப்பை ஒரு விபத்து போல் காட்ட எண்ணியுள்ளார். அந்த வகையில் சம்பவத்தன்று நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று தனது மனைவியை அவரது சகோதரருடன் பைக்கில் அனுப்பி வைத்துள்ளார்,

“விபத்துல இறந்தா 2 கோடி..” - மனைவியை கொன்று விபத்து போல் நாடகமாடிய கணவன்.. ராஜஸ்தானில் அதிர்வலை !

பின்னர் தான் ஏற்பாடு செய்த்தவர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்தார். அவர்களும் ஷாலுவின் பின்னால் சென்று அவர்களை காரால் மோதினர். இந்த விபத்தில் ஷாலு மற்றும் அவரது சகோதரர் உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஷாலுவின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்தபோது, மகேஷ் அழுது நாடகமாடியுள்ளார். இதையடுத்து இதனை அதிகாரிகள் விபத்தாக கருதினர். பின்னர் அவரது சடலத்தை வீட்டில் வைக்கப்பட்டிருக்கும்போதே திடீரென்று மகேஷ் காணாமல் போனார். திரும்பி வந்த பிறகு அவரிடம் அதிகாரிகள் விசாரிக்கையில், இன்சூரன்ஸ் அலுவலக சென்று வந்தது தெரியவந்தது

“விபத்துல இறந்தா 2 கோடி..” - மனைவியை கொன்று விபத்து போல் நாடகமாடிய கணவன்.. ராஜஸ்தானில் அதிர்வலை !

தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது, சந்தேகத்திற்குரிய வகையில் பதிலளித்துள்ளார். ஆனால் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து வீட்டின் அருகே இருந்த சிசிடிவியை ஆய்வு செய்ததில் மனைவி ஷாலு பைக்கில் சென்ற பிறகு, மகேஷ் தான் அமைத்த கூலிப்படைக்கு தகவல் கூறியிருந்தது பதிவாகியிருந்தது.

இதையடுத்து மகேஷிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான்தான், தனது மனைவியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அதிகாரிகள் அவரையும், கூலிப்படையினர் உட்பட 5 பேரை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.2 கோடி Insurance பணத்திற்காக மனைவியை கொலை செய்து விபத்துபோல் ஏற்பாடு செய்த கணவரின் செயல் ராஜஸ்தானில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories