பீகார் அரசுப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் மாணவர்களை பூச்சிகள் சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் அரசு சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாள்தோறும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அந்த பள்ளியில் மதிய உணவுகளை உண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பீகார் மாநிலத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இம்மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு தரமில்லாத மதிய உணவு வழங்கப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
அதன்படி சமீபத்தில் இது போன்ற அம்மாநிலத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட சார்ட் படி கொடுக்கவில்லை என்றும், மேலும் குழந்தைகளுக்கு வெறும் சாதத்துடன் உப்பு மட்டுமே கொடுக்கப்படுவதாகவும் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ வெளியிட்டார். ஆனால் இது குறித்து சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்காமல் மாறாக அவரை கைது செய்ததாக அண்மையில் பெரிய குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்த நிலையில், தற்போது வேறொரு அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு வைட்டமின் கிடைக்கும் என்பதால் பூச்சிகளை சாப்பிட கட்டயப்படுத்தியுள்ளார் அப்பள்ளி தலைமை ஆசிரியை. மேலும் மாணவர்கள் சாப்பிடும் மதிய உணவில் பூச்சிகள் உள்ளதாக தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அப்போது இது குறித்து அந்த மாணவர்களிடம், தினமும் உணவின் பூச்சிகளை சேர்த்து சாப்பிட்டல் வைட்டமின்கள் கிடைக்கும் என்று கூறி கட்டாயப்படுத்தி பூச்சிகளை உண்ணவைத்துள்ளார். பின்னர் இது குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்க, இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து இது குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் இது சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசுப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் மாணவர்களை பூச்சிகள் சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தியுள்ள சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.