இந்தியா

குஜராத் பாலம் விபத்து.. ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் 12 லட்சம் மட்டுமே செலவு.. வெளிவரும் மிகப்பெரும் ஊழல்!

குஜராத்தில் விபத்துக்குள்ளான பாலத்தில் துருப்பிடித்த கேபிள்களுக்கு பதில், பெயின்டிங், கிரீசிங் மற்றும் பிற மேலோட்டமான வேலைகளை மட்டுமே மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் பாலம் விபத்து.. ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் 12 லட்சம் மட்டுமே செலவு.. வெளிவரும் மிகப்பெரும் ஊழல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் 100 ஆண்டுகளுக்குப் பழமையானது. இந்த பாலம் பழுதடைந்ததால் சில மாதங்களுக்கு முன்பு மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் குஜராத் மாநிலத்தின் புத்தாண்டு தினமான கடந்த 26ம் தேதி திறக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு இந்த பாலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பாலத்தில் இருந்துள்ளனர். அப்போது திடீரென பாலம் இரண்டாக அறுந்து ஆற்றில் விழுந்துள்ளது. இதில்141 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குஜராத் பாலம் விபத்து.. ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் 12 லட்சம் மட்டுமே செலவு.. வெளிவரும் மிகப்பெரும் ஊழல்!

இந்த துயர விபத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் ஆளும் பா.ஜ.க அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாகக் குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக இந்த பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாகத் திறத்தால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் இதுதான் குஜராத் மாடலின் லட்சணம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பாலம் சீரமைப்பு செய்த நிறுவனத்துக்கு இந்த துறையில் அனுபவமே இல்லை என்பதும், அந்த நிறுவனமும் துருப்பிடித்த கேபிள்களுக்கு பதில், பெயின்டிங், கிரீசிங் மற்றும் பிற மேலோட்டமான வேலைகளை மட்டுமே மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் பாலம் விபத்து.. ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் 12 லட்சம் மட்டுமே செலவு.. வெளிவரும் மிகப்பெரும் ஊழல்!

பாலத்தைப் புதுப்பிக்க 'ஓரேவா' என்னும் கடிகாரங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனை அந்த நிறுவனம் 'தேவ்பிரகாஷ் சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனத்துக்கு உள்ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் அந்த நிறுவனத்துக்கும் பாலம் புதுப்பிக்கும் பணியில் பெரிய அனுபவம் இல்லை என்பது விசாரணையில் வெளிவந்துள்ளது.

இந்த பணிக்கு அரசு சார்பில் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் வெறும் ரூ.12 லட்சத்தினை மட்டுமே அந்த நிறுவனம் பால சீரமைப்புக்கு செலவளித்துள்ளது. மேலும் , பாலத்தை முற்றிலும் சீரமைக்காமல் துருப்பிடித்த கேபிள்களுக்கு பதில், பெயின்டிங், கிரீசிங் மட்டுமே பூசி பாலத்தை திறந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே முறையாக பாலம் அமைக்காத புகாரில் 'ஓரேவா' நிறுவனத்தின் முக்கிய நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்த சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories