இந்தியா

தன்னை கடித்த பாம்பை திரும்பக் கடித்து இருதுண்டாக்கிய சிறுவன்.. பழங்குடி நம்பிக்கையால் நடந்த விசித்திரம் !

தன்னை கடித்த பாம்பை கொல்லவேண்டும் என அதனை கடித்து இருதுண்டாக்கிய சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை கடித்த பாம்பை திரும்பக் கடித்து இருதுண்டாக்கிய சிறுவன்.. பழங்குடி நம்பிக்கையால் நடந்த விசித்திரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாம்புகடியால் அதிக உயிரிழப்பை சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இங்கு பொதுமக்களும் பாம்புகளும் நெருக்கமாக வசிப்பதால் அடிக்கடி பாம்புக்கடியால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சில நேரம் தன்னை கடித்த பாம்புகளை அடித்து கொலை செய்வதோ அல்லது வேறு விதமாக அதனை பழிவாங்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜாஸ்பூர் என்ற மலைவாழ் பகுதியில் கோர்வா என அழைக்கப்படும் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். காட்டுப்பகுதி என்பதால் அங்கு பாம்புகள் சர்வசாதாரணமாக உலாவருவது வழக்கம்.

தன்னை கடித்த பாம்பை திரும்பக் கடித்து இருதுண்டாக்கிய சிறுவன்.. பழங்குடி நம்பிக்கையால் நடந்த விசித்திரம் !

அங்குள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் வெளியே சென்றிருந்தபோது பாம்பு ஒன்று சிறுவனை கடித்துள்ளது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தன்னை கடித்த பாம்பை பிடித்து அதனை இருமுறை கடித்து துண்டாக்கியுள்ளார்.

பின்னர் வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை நடைபெற்ற நிலையில் சிறுவன் தற்போது நலமாக உள்ளார். இதனிடையே பாம்பு கடித்தால் அந்த பாம்பை திருப்பி அடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை அந்த பழங்குடி மக்களிடையே இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories