இந்தியா

திருட வந்த இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த திருடன்.. பரபரப்பான பெங்களூரு.. நடந்தது என்ன ?

திருடன் ஒருவர் திருட வந்த இடத்தில் பணத்தை மூட்டையாக கட்டி வைத்து விட்டு, அதே வீட்டில் தூக்கில் தொங்கிய சம்பவம் பெங்களுருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருட வந்த இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த திருடன்.. பரபரப்பான பெங்களூரு.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள இந்திரா நகரில் வசித்து வருபவர் ஸ்ரீதர் சமந்தாராய் (வயது 42). மென் பொறியாளராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த மாதம் தனது மனைவியுடன் வெளிநாடு பயணத்திற்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் யாருமில்லை.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளனர். அப்போது தங்கள் கையில் வைத்திருந்த சாவியை கொண்டு கதவை திறக்க முயன்றனர். ஆனால் கதவு திறக்கவில்லை. இதனால் சாவி செய்யும் கடையை அணுகி வேறு சாவி செய்ய சொல்லி, அதை வைத்து கதவை திறந்துள்ளனர்.

திருட வந்த இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த திருடன்.. பரபரப்பான பெங்களூரு.. நடந்தது என்ன ?

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பீரோவை திறந்து பார்க்கையில் பல இலட்சம் மதிப்புடைய நகைகள், பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் வந்து விசாரணை மேற்கொண்ட அவர்கள், தடயங்களை சேகரித்துக்கொண்டிருந்தது. அப்போது எதேர்ச்சியாக பூஜை அறையை திறந்து பார்க்கையில் அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் கிடந்துள்ளார். அவருக்கு அருகில் பண மூட்டை, வீட்டை உடைக்கு கொண்டு வந்த ஆயுதங்கள் உள்ளிட்டவை இருந்தது.

திருட வந்த இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த திருடன்.. பரபரப்பான பெங்களூரு.. நடந்தது என்ன ?

இதனைக்கண்டதும் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் உடனடியாக சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் அவரது புகைப்படம் காவல்துறை வட்டாரத்திற்கு அனுப்பப்பட்டது. அப்போது அவர் அசாம் மாநிலத்தை திலீப் பகதூர் (வயது 45) என்பதும், கடந்த சில வருடங்களாக பெங்களுருவில் தான் இருந்து வந்ததும் தெரியவந்தது.

திருட வந்த இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த திருடன்.. பரபரப்பான பெங்களூரு.. நடந்தது என்ன ?

மேலும் அவர் இங்கு பல கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் வீட்டில் கொள்ளையடிக்க வந்ததும் இவர் தான் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இருப்பினும், திருட வந்த இடத்தில் தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன ? என்பது குறித்தும், இது உண்மையில் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருட வந்த இடத்தில் பண மூட்டையுடன் திருடன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெங்களுருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories