ஆந்திரா மாநிலத்தின் தலைநகராக அமராவதியை அமைக்க கோரி தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தின் அடுத்த கட்டமாக விவசாயிகள் பாதயாத்திரை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காமன் இந்தியா பாலத்தின் அருகே விவசாயிகள் பாதயாத்திரை சென்றுகெண்டிருந்தனர். அப்போது நடந்துவந்த விவசாயி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டு விவசாயிகள் பதற்றம் அடைந்துள்ளனர்.
பின்னர், அங்குப் பாதுகாப்பு பணியிலிருந்த காவல் ஆய்வாளர் திரிநாத் உடனே மயங்கி விழுந்தவிவசாயின் நெஞ்சில் அழுத்தி சிபிஆர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். பிறகு விவசாயி கண்விழுத்துபார்த்துள்ளார். இதையடுத்து விவசாயியை அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தற்போது விவசாயியின் உயிரைக் காப்பாற்றிய காவல் ஆய்வாளர் திரிநாத் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. சில காவலர்கள் பொதுமக்களிடம் முரட்டுத்தனமாக நடந்து வரும் நிலையில் திரிநாத் போன்ற காலர்களும் காவல்துறையில் இருக்கின்றனர் என்பதை இந்த சம்பவம் நம் எல்லோருக்கும் உணர்த்தியுள்ளது.