இந்தியா

GirlFriend-ன் ஷாப்பிங் போன கணவன்.. கையும் களவுமாகப் பிடித்து விரட்டி விரட்டி அடித்த மனைவி: Viral Video!

உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத் சந்தையில் பெண்ணுடன் ஷாப்பிங் வந்த கணவனை மனைவி விரட்டி விரட்டி அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

GirlFriend-ன் ஷாப்பிங் போன கணவன்.. கையும் களவுமாகப் பிடித்து விரட்டி விரட்டி அடித்த மனைவி: Viral Video!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் மணீஷ்திவாரி. சமீபத்தில் இவரது மனைவி சண்டைபோட்டு விட்டு கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மணீஷ்திவாரிக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு காசியாபாத்தில் உள்ள சந்தைக்கு ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மனைவியும் அவரது தாயாரும் அங்கு வந்துள்ளனர். அப்போது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ஷாப்பிங் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மணீஷ்திவாரியின் மனைவி கணவனைப் பிடித்து சரமாரியாக விரட்டி விரட்டி அடுத்துள்ளார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

GirlFriend-ன் ஷாப்பிங் போன கணவன்.. கையும் களவுமாகப் பிடித்து விரட்டி விரட்டி அடித்த மனைவி: Viral Video!

மேலும் கணவர் மீது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணுடன் ஷாப்பிங் வந்த கணவனை மனைவி விரட்டி விரட்டி அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories