இந்தியா

எருமைகள் மோதியதில் உடைந்து விழுந்த ரயிலின் முன்பகுதி.. புதிய 'வந்தே பாரத்' ரயிலுக்கு வந்த சோதனை !

வந்தே பாரத் ரயிலில் எருமைகள் மோதியதில் ரயிலின் முன்பகுதி உடைந்து விழுந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

எருமைகள் மோதியதில் உடைந்து விழுந்த ரயிலின் முன்பகுதி.. புதிய 'வந்தே பாரத்' ரயிலுக்கு வந்த சோதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து 3-வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த 30ம் தேதி தொடங்கி வைத்தார்.

புதிதாகப் பரிசோதனை செய்யப்பட்ட 3-வது வந்தே பாரத் ரயிலானது 52 நொடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டி சாதனை படைத்தது. மூன்றாவது வந்தே பாரத் ரயிலின் அதிகபட்ச வேகம் என்பது 180 கி.மீ என்றும், முந்தைய ரயிலின் அதிகபட்ச வேகத்தை ஒப்பிடுகையில் இது 20 கி.மீ. கூடுதல் வேகம் கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டது.

எருமைகள் மோதியதில் உடைந்து விழுந்த ரயிலின் முன்பகுதி.. புதிய 'வந்தே பாரத்' ரயிலுக்கு வந்த சோதனை !

மும்பையில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்படும் இந்த ரயிலானது இன்று காலை 11.15 மணியளவில் இந்த ரயில் வத்வா ரயில் நிலையத்திற்கும், மனிநகர் ரயில் நிலையத்திற்கும் இடையே சென்றுக் கொண்டிருந்தபோது அங்கு எருமைகள் தண்டவாளத்தில் குறுக்கிட்டது.

இதன் காரணமாக வந்தே பாரத் ரயில் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்ததாகவும் ஆனால் இந்த விபத்தால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியானது. ஆனால் எருமைகள் மோதியதில் ரயிலின் முன்பகுதி உடைந்து விழுந்தது காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

எருமைகள் மோதியதில் உடைந்து விழுந்த ரயிலின் முன்பகுதி.. புதிய 'வந்தே பாரத்' ரயிலுக்கு வந்த சோதனை !

ரயிலின் முன்பகுதி பைபரால் தயாரிக்கப்பட்டுள்ளதால் உடைந்து விழுந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இணையதளத்தில் இது தொடர்பாக பலர் இது தான் மோடியின் மேக் இன் இந்தியா திட்டமா என விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories