ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை அடுத்த காவிலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்தார். இதையடுத்து இவர் மகளுக்கும் திருமணம் செய்து வைத்ததையடுத்து, தனது மகன் கோட்டேஸ்வர ராவுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மகன் கோட்டேஸ்வர ராவ் அண்மைக்காலமாக சொத்தை தன் பெயரில் எழுதி தருமாறு தனது தாயை கொடுமை செய்து வந்துள்ளார். இவர்களுக்குள்ள அடிக்கடி ஏற்பட்ட தகராறு சம்பவத்தன்று பெரும் கைகலப்பாக மாறியது. எழுதி கொடுக்க முடியாது என மறுத்த தாயை கோட்டேஸ்வர ராவ் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் தாயோ, தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் அப்படியும் விடாத கோட்டேஸ்வர ராவ், தனது சகோதரி வீட்டிற்கும் சென்று தாயிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் அவரது கையை பிடித்து அங்கிருந்து தரதரவென இழுத்து வந்துள்ளார். இதையடுத்து தனது தாயை சொகத்தரன் கடத்தி சென்றதாக கூறி சகோதரி அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேகொண்டனர்.
பின்னர் மகனிடமிருந்து காவல்துறயினர் தாயை மீட்டனர். இதைத்தொடர்ந்து மகன் தன்னை சொத்துக்காக கொடுமை செய்வதாக புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.