இந்தியா

மம்தா பானர்ஜியுடன் 30 நிமிடம் ஆலோசனை: சுப்பிரமணியன் சுவாமி திடீர் சந்திப்பால் மோடி, அமித்ஷா கலக்கம்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திடீரென சந்தித்துள்ளார்.

மம்தா பானர்ஜியுடன் 30 நிமிடம் ஆலோசனை: சுப்பிரமணியன் சுவாமி திடீர் சந்திப்பால் மோடி, அமித்ஷா கலக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

மேலும், ஜி.எஸ்.டி வரி விதிப்பால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. மருந்து முதல் வீட்டு உபயோக பொருளான சிலிண்டர் வரை அனைத்து பொருட்களின் விலையும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்த விலை ஏற்றத்தின் காரணமாக மக்கள் கடும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இப்படி மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தி வரும் ஒன்றிய அரசை பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களே விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக பா.ஜ.கவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தொடர்ச்சியாக பா.ஜ.க அரசின் திட்டங்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். கொரோனா காலத்தில் பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாகத் தீவிரமான கொரோனா கட்டுப்பாட்டுக் குழுவே தேவை என கடுமையான சொற்களைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க கட்சிக்குள் தேர்தலே நடத்தப்படுவது இல்லை. மோடியின் ஒப்புதல் படியே பதவிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர் என நேற்று சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்திருந்தார். இதையடுத்து இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை திடீரென சந்தித்துள்ளார். இதனால் பா.ஜ.கவிற்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜியுடன் 30 நிமிடம் ஆலோசனை: சுப்பிரமணியன் சுவாமி திடீர் சந்திப்பால் மோடி, அமித்ஷா கலக்கம்!

இந்த சந்திப்பு குறித்து சுப்பிரமணியன் சுவாமி புகைப்படத்துடன் ட்விட்டர் பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், இன்று நான் கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்தேன். அவர் ஒரு தைரியமான நபர். சி.பி.எம் கட்சிக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் என்னை ஈர்த்தது. அதில் அவர் கம்யூனிஸ்ட்டை வீழ்த்தினார் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories