இந்தியா

8 Youtube சேனல்களை முடக்கிய ஒன்றிய அரசு.. முழு விவரம் - பட்டியல் இதோ!

பொய் செய்திகளைப் பரப்பியதாக 8 youtube சேனல்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது.

8 Youtube சேனல்களை முடக்கிய ஒன்றிய அரசு.. முழு விவரம் - பட்டியல் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசு கடந்த ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதையடுத்து தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் youtube சேனல்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

8 Youtube சேனல்களை முடக்கிய ஒன்றிய அரசு.. முழு விவரம் - பட்டியல் இதோ!

ஏற்கனவே பொய் செய்திகளை வெளியிட்டதாக 22 youtube சேனல்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. இந்நிலையில் மேலும் 8 youtube சேனல்களை ஒன்றிய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த 8 சேனல்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சேனலும் அடங்கும். இந்த சேனலை 85 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

8 Youtube சேனல்களை முடக்கிய ஒன்றிய அரசு.. முழு விவரம் - பட்டியல் இதோ!

கடந்த ஓராண்டில் மட்டும் பொய்யான கருத்துக்களைப் பரப்பியதாக 102 youtube சேனல்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. மேலும் முடக்கப்பட்ட சேனல்களில் உள்ள தேசவிரோத செய்திகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Sab Kuch Dekho,Loktantra TV, U&V TV, AM Razvi,SeeTop5TH,News ki Dunya,Gouravshali Pawan Mithilanchal ஆகிய 8 youtube சேனல்களைதான் ஒன்றிய அரசு முடக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories