தெலங்கானா மாநிலம், மெடித்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் புல்லையா. இவரது மனைவி நாகம்மா. இவர் சம்பவத்தன்று வீட்டில் உணவு சமைத்துள்ளார்.
அப்போது, தவறுதலாகச் நல்லெண்ணெய்க்குப் பதில் பூச்சி மருந்தை ஊற்றி குழும்பு வைத்துள்ளார். பின்னர் இந்த குழம்பை ஊற்றிச் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த கணவன் புல்லையாவுக்கும், மகள் பல்லவிக்கும் உணவு எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது மகள் உணவில் ஏதோ நாற்றம் அடிப்பதாகக் கூறி தனக்குச் சாப்பாடுவேண்டாம் என சாப்பிட மறுத்துள்ளார். ஆனால் நல்லையா உணவு சாப்பிட்டுள்ளார்.
இதையடுத்து சிறிது நேரத்திலேயே புல்லையா, நாகம்மா ஆகிய இருவரும் வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்துள்ளனர். இதைப்பார்த்து மகள் அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு வயலில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் நாகம்மா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். புல்லையாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நாகம்மா சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அவர் தவறுதலாகச் சமையல் எண்ணெய்க்குப் பதில் பூச்சி மருந்தை ஊற்றிக் குழம்பு வைத்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.