மத்திய பிரதேச மாநிலம், ஜபுவா பகுதியை அடுத்துள்ள ருபரேல் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் மித்தாலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பழங்குடியின இளம்பெண். தனது கணவருடன் வசித்து வந்த இவர், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அண்டை கிராமத்தை சேர்ந்த முகேஷ் கட்டார் என்பவரை காதலித்து தனது கணவனை விடுத்து, அவருடன் சென்றுவிட்டார்.
இதையடுத்து தற்போது முகேஷை விட்டு மீண்டும் தனது கணவரை தேடி 8 மாதங்களுக்கு பிறகு வந்துள்ளார். அந்த பெண் தனது கணவரை தேடி செல்வதை அறிந்த முகேஷ், மீண்டும் அவரை கூட்டி வர தனது கூட்டாளிகள் 5 பேருடன் சென்று அவரை திரும்ப கூட்டி வர எண்ணியுள்ளார்.
அப்போது அங்கே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு இரு கும்பலுக்குமிடையே கைகலப்பாக மாறியுள்ளது. இதில் முகேஷ் கட்டாரா மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து பெண், கணவர் மற்றும் கணவரின் சகோதரியையும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் நடு ரோட்டில் வைத்து அந்த பெண்ணின் ஆடைகளை வலுக்கட்டாயமாகக் கழற்றி அவமான படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அங்கிருந்தவர்களில் சிலர் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணை மீட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்ட முகேஷ் கட்டார் மற்றும் அவரது நண்பரகளை கைது செய்து வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
தற்போது இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இதனை அம்மாநில எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் பகிர்ந்து கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.